Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த ஊரில், 'ஹம்மர்' காரில் கெத்து காட்டிய டோணி.. வாயை பிளந்த நியூசிலாந்து வீரர்கள்- வீடியோ

ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து நடுவேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறும் நிலையில், நியூசிலாந்து வீரர்களை தனது கார் ஓட்டும் சாமர்த்தியத்தால் மிரட்டியுள்ளார் இந்திய கேப்டன் டோணி.

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 2வது போட்டியில் நியூசிலாந்து அணியிடம், இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

videos

3வது போட்டி நடைபெற்ற, மொகாலியிலிருந்து இரு நாட்டு அணிகளும் விமானத்தில் ராஞ்சி வந்தது. விமான நிலையத்தில் இருந்து இரு நாட்டு வீரர்களும் சொகுசு பஸ்களில் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், டோணி மட்டும் இந்திய அணி வீரர்களுடன் பஸ்சில் பயணிக்கவில்லை.

விமான நிலையத்தில் தயாராக கொண்டுவரப்பட்டிருந்த டோணியின் விலைமதிப்புள்ள ஹம்மர் வகை காரில் ஏறி ஹோட்டலுக்கு கிளம்பினார். அந்த காரை அவரே ஓட்டியதோடு, நியூசிலாந்து வீரர்கள் பயணித்த பஸ்சை ஓவர் டேக் செய்து 'சீன் போட்டார்' டோணி. நியூசிலாந்து வீரர்கள் வாயை பிளந்தபடி "வாவ்..." என்றனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

டோணி ஒரு ரேஸ் பிரியர். அவரிடம் விலை உயர்ந்த 27 வகை மோட்டார் சைக்கிள்களும் பல்வேறு வகையான கார்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் வீடியோவை பார்த்து டோணி ஸ்டைலை ரசிக்கலாம்.

Story first published: Wednesday, October 26, 2016, 11:16 [IST]
Other articles published on Oct 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+