ரன்வீருக்கு போட்டியாக ஜிவா குட்டி- டுவிட்டரில் டோணியின் தேவதை செய்யும் குறும்புகள்!
ராஞ்சி: கேப்டன் டோணியின் குட்டிப் பாப்பா ஜிவா செம கலக்கு கலக்கிறாள் இப்போதே.
பிறந்து 6 மாதம்தான் ஆகிறது இந்த குட்டிக்கு. அதற்குள் ரேப் பாட்டு கேட்க ஆரம்பித்திருக்கிறது இது.
தனது அம்மாவின் லேப்டாப்பில் ஹிட் தி குவான் ரேப் பாட்டைப் போட்டுக் கொடுக்க அதைப் பார்த்து ரசிக்கிறது இந்த குட்டிப் பாப்பா.

அழகு குட்டி செல்லம்:
ஜிவா குட்டி பெரிய கண்களை அகல விரித்து டான்ஸை உற்றுப் பார்க்கிறது. தலையை டொம்மென்று கீழே முட்டுகிறது. அப்படியே சைடுவாக்கில் படுத்துக் கொண்டு கை விரல்களால் மவுஸ்பேடை நிமிண்டியபடி பாட்டை ரசிக்கிறது.

மகிழ்ச்சியில் நிறைந்த வீடு:
ஜிவா செய்யும் அழகான குறும்புகள் டோணியின் வீட்டையே குதூகலத்தால் நிறைத்து வருகின்றதாம்.

டுவிட்டரில் செம ஹிட்:
ஜிவாவின் இந்த குறும்புகளையும், சேட்டைகளையையும் வீடியோவாக எடுத்து டிவிட்டரில் போட்டுள்ளார் அம்மா சாக்ஷி சிங் டோணி.
ஹிட் தி குவான்:
ஜிவா குட்டிக்கு பிடித்த இந்த ஹிட் தி குவான் பாடல் மிகப் பிரலபமானது. இந்தப் பாடலை பாடிய ராப் பாடகர் பின்னர் பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தககது.


Click it and Unblock the Notifications