ரசிகர்களிடையே பெரிய ஹிட்டான டோணியின் கீரிப்புள்ள ஹேர்ஸ்டைல்
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் புதிய ஹேர்ஸ்டைல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி தனது ஹேர்ஸ்டைலை மாற்றினார். தலையின் இரண்டு பக்கமும் மொட்டையாக இருக்க நடுமண்டையில் மட்டும் முடி வைத்துள்ளார்.
டோணியின் இந்த புதிய ஹேர்ஸ்டைல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெக்காம் மாதிரி
டோணியின் கீரிப்பிள்ளை ஹேர்ஸ்டைல் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் ஹேர்ஸ்டைல் போல் உள்ளது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

நீள முடி
டோணி சர்வதேச போட்டிகளில் முதன்முதலாக விளையாடியபோது நீளமான முடி வைத்திருந்தார். அதைப் பார்த்து அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் டோணியை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சப்னா பாவ்னானி
பிக் பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்ட ஹேர்ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி தான் டோணியின் புதிய ஹேர் கட்டுக்கு பின்னால் இருப்பவர் என்று கூறப்படுகிறது.

டோணி டோணி தான்
எந்த ஹேர்ஸ்டைலும் டோணிக்கு சூப்பராக இருக்கும். என்ன இருந்தாலும் டோணி டோணி தான் என்று அவரது தீவர ரசிகரான அம்ரித் ராஜ் என்பவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications