Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெண்டு பக்கமும் வழிச்சு.. நடுவுல கீரிப்பிள்ளை மாதிரி.. இதுதாங்க இப்போ டோணி ஹேர்ஸ்டைல்!

மும்பை: ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பாரோ இல்லையோ, முதல்ல ஹேர்ஸ்டைலை மாற்றி விட்டார் கேப்டன் டோணி.

ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க கிளம்பி விட்ட கேப்டன் டோணி புது விதமான ஹேர் ஸ்டைலுடன் காட்சி தருகிறார்.

டிசம்பர் 9ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதலில் டோணி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக பில் ஹியூக்ஸ் என்ற ஆஸ்திரேலிய வீரர் பவுன்சர் பந்து பட்டு மரணமடைந்ததால் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 9ம் தேதிக்குத் தள்ளிப் போய் விட்டது.

MS Dhoni's new look for Australia series

இதனால் தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலேயே கலந்து கொள்ளவுள்ளார் டோணி. இதற்காக இன்று அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். போவதற்கு முன்பு முடிவெட்டி டிரிம்மாகியுள்ளார். அதுவும் வித்தியாசமாக.

கடந்த வருடம் ஐபிஎல் போட்டியின்போது மோஹாக் ஹேர் ஸ்டைலுடன் காணப்பட்டார் டோணி. இந்த நிலையில் தற்போது இன்னொரு வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் அவர் ஆஸ்திரேலியா கிளம்பியுள்ளார்.

தலையின் இருபக்கமும் நன்றாக வழித்து விட்டுள்ளார். நடுவில் கீரிப்பிள்ளை ஒன்று தொத்துக் கால் போட்டு படுத்துக் கொண்டிருப்பது போல முடியை விட்டு வைத்துள்ளார். இதுதான் டோணியின் புது ஹேர் ஸ்டைல்

இந்த ஹேர்ஸ்டைலை புகைப்படக்காரர்களிடம் காட்டி சிலிர்த்தும், சிரித்தும் கொண்டார் டோணி.

இந்தப் படத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி நிறுவனம் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிக்கு என்ன ஹேர்ஸ்டைல் வைக்கப் போகிறாரோ ... ஆனால் எதிராளிகளை மொட்டை அடிப்பார் என்று நம்புவோம்!

Story first published: Friday, December 5, 2014, 15:09 [IST]
Other articles published on Dec 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+