“அன்று ஜீவா; இன்று இது” தோனியிடம் குறையாத குசும்பு.. மீண்டும் ஒரு நச் கருத்து..இணையத்தில் சிரிப்பலை
சிட்னி: அழுத்தங்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி கூறியுள்ள நச்சென்ற கருத்து இணையத்தை கலக்கி வருகிறது.
இந்திய கிரிக்கெட்டில் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத வீரர் எம்.எஸ்.தோனி. இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற புகழுடன் திகழ்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் மற்றும் பிசினஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தோனி பேச்சுக்கள்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தோனியை பார்க்க முடிவதாகவும், அவரின் பேச்சை கேட்க முடிவதாகவும் கவலைப்பட்ட ரசிகர்களுக்கு சமீப காலமாக தோனி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். சமீப காலமாக அவர் கலந்துக்கொள்ளும் நேர்காணல் நிகழ்ச்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் மகள் ஜீவா குறித்து ஒரு வேடிக்கையான கருத்தை கூறினார்.

நடந்தது என்ன?
அதாவது தோனியிடம், "நீங்கள் வாழ்வில் பெற்ற விலைமதிப்பற்ற பரிசு எது?" நெரியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் நீண்ட நேரம் யோசிக்க, மகள் ஜீவா தானே என பாய்ண்ட் எடுத்துக்கொடுத்தார்நெரியாளர். இதனை கேட்ட தோனி, " ஜீவா எனக்கு கிடைத்ததற்கு கடின உழைப்பு தான் காரணம், பரிசு கிடையாது என குசும்பாக கூறினார். இது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருந்தது.

மீண்டும் அதே சம்பவம்
இந்நிலையில் இதே போன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் "உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் பிரஷர்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?" எனக் கேட்டார். இதற்கு பதில் கொடுத்த தோனி "அது மிகவும் சுலபம் தான். செய்தித் தாள்களை படிக்கவே படிக்காதீர்கள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்க்கவே பார்க்காதீர்கள்" என சிரித்துக்கொண்டே கூறினார்.

தோனியின் தன்னம்பிக்கை
தோனி பேசியிருந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. "தோனி மிகவும் மெதுவாக விளையாடுகிறார், அவருக்கு வயதாகிவிட்டது, தோனி இனி அவ்வளவு தான்" என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துக்கொண்டே தான் உள்ளது. ஆனால் இதை அனைத்தையும் உடைத்து தான் 2021ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications