Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சொன்னது அப்படியே நடக்குதே.. டி20 உலகக்கோப்பை இந்த முறை இந்தியாவுக்கு தானா??.. 2 ஆதாரங்கள் இதோ!!

சிட்னி: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா குறித்து எம்.எஸ்.தோனி கூறிய அனைத்து விஷயங்களும் நடந்துக்கொண்டே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணி தான் தொடக்கம் முதலே கெத்து காட்டி வருகிறது. தனது முதல் 2 லீக் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியதால் தோற்றுவிடும் என ரசிகர்கள் கவலைப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி ஒற்றையாளாக போராடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். இதே போல நெதர்லாந்துடனான போட்டியிலும் 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று அசத்தியுள்ளது.

நிறைவேறும் கனவு

நிறைவேறும் கனவு

இந்நிலையில் தோனி கூறியதை போன்றே நடந்து வருவதால், இந்த முறை இந்தியா கோப்பையை வென்றுவிடும் போல இருக்கிறதே? என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஓரியோ பிஸ்கட்டின் புதிய வடிவத்தை தோனி அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், 2011ம் ஆண்டு இதே பிஸ்கட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றது. இந்தாண்டும் பிஸ்கட் அறிமுகமாகியுள்ளது. இனி என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம் என்பது போன்று பேசியிருந்தார்.

2 விஷயங்கள் உதாரணம்

2 விஷயங்கள் உதாரணம்

கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா என்பது போல தோனியின் பேச்சை ரசிகர்கள் கிண்டலடித்து வந்தனர். ஆனால் அதற்கு இரட்டை மடங்காக நடந்து வருகிறது. அதில் முதல் விஷயம் இக்கட்டான சூழலில் இருந்த போதும், பாகிஸ்தானை இந்தியா வென்றது. இன்னொன்று அயர்லாந்து அணியிடம் இங்கிலாந்து தோல்வி பெற்றது தான்.

இங்கிலாந்து தோல்வி எதனால்?

இங்கிலாந்து தோல்வி எதனால்?

கடந்த 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் அயர்லாந்து அணி முதல்முறையாக இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. அப்போது இந்தியா கோப்பையை வென்றது. இதே போல தற்போது டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தியுள்ளது. இதனால் இந்தாண்டும் இந்தியாவின் பக்கம் காற்று வீசுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Thursday, October 27, 2022, 19:36 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+