Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த 5 ஆண்டுக்கு செட்டில்.. சிஎஸ்கேவில் கடைசி கடமையை தீர்த்த தோனி.. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த 5 ஆண்டுகளுக்கு செட்டில் ஆகும்படி கேப்டன் தோனி சத்தமே இன்றி ஒரு விஷயத்தை செய்து முடித்துள்ளார்.

2023ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த முறை மிகவும் முக்கியமான ஏலமாகும். ஏனென்றால் கேப்டன் எம்.எஸ்.தோனி விளையாடப்போகும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கக்கூடும். எனவே அவருக்கு பின்னர் எப்படி செயல்படப்போகிறது என்பது இந்த ஏலத்தை வைத்து தான் உள்ளது.

ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் மினி ஏலம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தமாக 7 வீரர்களை கழட்டிவிட்டும், 18 வீரர்களை தக்கவைத்தும் உள்ளது. இதன் மூலம் மீதம் ரூ.20.45 கோடியை தன்னிடம் வைத்துள்ளது.

இதை வைத்து சாம் கரண், மணிஷ் பாண்டே, நாராயண் ஜகதீசன், பாபா இந்திரஜித் போன்ற வீரர்களை குறிவைத்து எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதில் மறைந்துள்ள திட்டமே சைலண்டாக உள்ளது.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

சிஎஸ்கே அணி வழக்கமாக அனுபவ வீரர்களை வைத்து தான் விளையாடும். இதனால் டேடீஸ் ஆர்மி என கிண்டலுக்கு உள்ளாகும். ஆனால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய வயதான வீரர்களே உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா??.. ஆம், தற்போது அந்த அணி தக்கவைத்துள்ள 18 வீரர்களில் 5 வீரர்கள் மட்டுமே 31 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆகும்.

யார் அந்த 5 பேர்

யார் அந்த 5 பேர்

கேப்டன் எம்.எஸ்.தோனி (41), அம்பத்தி ராயுடு ( 37), மொயீன் அலி (35), டுவைன் பிரிட்டோரியஸ் (33), ஜடேஜா (34) ஆகிய 5 பேர் மட்டுமே 31 வயதிற்கு மேல் உள்ளனர். இவர்களிலும் 35 வயதிற்கு மேல் உள்ள தோனி மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும் இந்தாண்டுடன் ஓய்வு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர்களின் இடத்தை நிரப்பவும் இளம் வீரர்களுக்கே குறிவைக்கப்படுகின்றன.

குறிவைக்கப்பட்டுள்ள வீரர்கள்

குறிவைக்கப்பட்டுள்ள வீரர்கள்

அதாவது சிஎஸ்கே இந்த ஏலத்தில் குறிவைப்பதாக கூறப்படும் சாம் கரண், நாராயன் ஜெகதீசன், பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ், ஹேரி புரூக் போன்ற வீரர்களுக்கு 30 வயதிற்கும் கீழ் தான் உள்ளனர். இதன் மூலம், தோனி சத்தமே இல்லாமல் ஒரு முற்றிலும் இளம் சிஎஸ்கே படையை உருவாக்கியிருப்பது தெரியவருகிறது. ஒரு சில வயதான வீரர்கள் மட்டும் அனுபவத்திற்காக அணியில் இருக்கவுள்ளனர். அதுவும் ரெய்னா, தோனி, பிராவோ, உத்தப்பா என முன்பு சிஎஸ்கேவில் எதுபோன்ற வீரர்கள் இருந்தனரோ, அதே போன்ற வீரர்களை கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 22, 2022, 18:50 [IST]
Other articles published on Dec 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+