Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

111 மீட்டர் இமாலய சிக்ஸ்…! ஸ்டேடியத்தை தாண்டி வெளியே விழுந்த பந்து… அதுக்கும் தோனி தான் காரணம்

சென்னை:பெங்களூரு அணிக்கு எதிரான சென்னை அணி ஒரு ரன்னில் வெற்றியை கோட்டை விட்டாலும், தோனி அடித்த சிக்சரில் ஸ்டேடியத்தை தாண்டி பந்து வெளியே சென்றதை கண்ட ரசிகர்கள் சிலாகித்தனர்.

பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்கள் சேர்த்தார்.

MS Dhoni’s six hits roof vs RCB: CSK captain smashed 111m six

தொடர்ந்து ஆடிய சென்னை அணி 28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. ராயுடு 29 ரன்கள் எடுத்த நிலையில் தோனி நிதானமாக நின்று ரன்களை சேர்த்தார்.

வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் தோனி 24 ரன்களை விளாசினார். கடைசி பந்தில் தாகூர் ரன்அவுட் ஆனதால் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டனான தோனி அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். அதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிலும் இவர் அடித்த சிக்ஸ் ஒன்று மைதானத்தில் வெளியே சென்று விழுந்தது. 111 மீட்டர் அடிக்கப்பட்ட அந்த இமாலய சிக்சர் பார்வையாளர்களின் கண்களில் இருந்து மறைந்தது என்று வர்ணனையாளர்கள் கூறும் அளவிற்கு மைதானத்தின் மேற்கூரையில் மேல் பறந்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

Story first published: Monday, April 22, 2019, 20:56 [IST]
Other articles published on Apr 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+