Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியின் மகள் பெயர் 'ஜிவா': ட்விட்டரில் அறிவித்த சாக்ஷி

டெல்லி: கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி தங்கள் குழந்தைக்கு ஜிவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் டோணியின் மனைவி சாக்ஷி கடந்த 6ம் தேதி குர்காவ்னில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை 3.7 கிலோ எடையுடன் பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சாக்ஷி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த உலகிற்கு வந்துள்ள உன்னை வரவேற்கிறோம் அழகிய ஜிவா! அம்மா, அப்பா உன்னை கொண்டாடுகிறோம்! வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! என்று தெரிவித்துள்ளார்.

ஹீப்ரூ மொழியில் ஜிவா என்றால் ஒளி, சுடர் என்று அர்த்தம்.

டோணி தற்போது உலகக் கோப்பை போட்டிக்காக ஆஸ்திரேலியாவில் உள்ளார். குழந்தையை பார்க்க இந்தியா செல்கிறீர்களா என்று டோணியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், நான் தேச பணியில் உள்ளேன். உலகக் கோப்பை முடியும் வரை அனைத்தும் காத்திருக்க வேண்டும் என்றார்.

Story first published: Tuesday, February 10, 2015, 10:41 [IST]
Other articles published on Feb 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+