10வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்... காதலை உணர்ந்த தருணம்... சாக்ஷியின் மெசேஜ்
ராஞ்சி : கடந்த 2010ல் திருமணம் செய்த தோனி -சாக்ஷி ஜோடி, தங்களது 10வது ஆண்டு திருமணநாள் கொண்டாட்டத்தை கடந்த சனிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையொட்டி, அவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்தனர். இதற்கு நன்றி கூறும் வகையில் சாக்ஷி தோனி, தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் கூடிய மெசேஜை பகிர்ந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும் சேர்ந்தே நடை பயின்றதாக அவர் அந்த மெசேஜில் தெரிவித்துள்ளார்.

10வது திருமண நாள்
கடந்த சனிக்கிழமை தங்களின் 10வது திருமண நாளை கெண்டாடி மகிழ்ந்தது எம்எஸ் தோனி -சாக்ஷி தோனி ஜோடி. கடந்த 2010ல் டெஹ்ராடூனில் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில், தாங்கள் இணைந்திருந்த இந்த 10 ஆண்டுகளின் இனிய நினைவுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார் சாக்ஷி தோனி.

மகிழ்வான தருணங்கள்
இதையொட்டி ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையில் இவர்களை நனைய விட்டனர். தொடர்ந்து தங்களின் 10 ஆண்டுகால திருமண வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களை புகைப்படங்களாக சாக்ஷி தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த புகைப்படங்களை பகிர்ந்த சாக்ஷி, இந்த 10 ஆண்டுகளை தாங்கள் சிறப்பாக கடந்துவர உதவி புரிந்த நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சேர்ந்த நடை பயின்றோம்
இந்த 10 ஆண்டுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும் சேர்ந்தே நடை பயின்றதாகவும் சாக்ஷி குறிப்பிட்டுள்ளார். இருவரும் சேர்ந்தே இந்த இனிய பயணத்தை அழகாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்தவரின் வளர்ச்சிக்கு வழிவிட்டு முதிர்ச்சியுடன் நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

காதலை உணர்ந்த தருணம்
ஒருவர் மீது ஒருவர் பைத்தியமாக மாறியதாகவும், இது தங்களை இன்னும் நெருக்கமாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்ததன்மூலம் அதன் இன்றியமையாமையை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் சேர்ந்தே இருந்ததாகவும் இது தங்களுக்குள் இருந்த அன்பு மற்றும் காதலை உணர செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications