Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாப்ட்டு, நல்லா விளையாடனும் சரியா... சென்னை வீரர்களுக்கு விருந்து வைத்த டோணி, சாக்ஷி!

ராஞ்சி: சொந்த ஊருக்கு வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கேப்டன் டோணியும், அவரது மனைவி சாக்ஷியும் நேற்று டின்னர் வைத்து அசத்தி விட்டனர்.

ராஞ்சியில் உள்ள டோணியின் வீட்டில்தான் இந்த விருந்து தடபுடலாக நடந்ததாம்.

ராஞ்சிதான் டோணியின் சொந்த ஊர். தனது ஊருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வந்துள்ளதால், அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு குஷிப்படுத்தி விட்டார் டோ்ணி.

வகை வகையான சாப்பாடு

வகை வகையான சாப்பாடு

வகை வகையான சாப்பாடு போட்டு சாக்ஷியும், டோணியும், சென்னை வீரர்களை கலக்கி விட்டனராம்.

8 மணிக்கு ஆரம்பிச்சு

8 மணிக்கு ஆரம்பிச்சு

இரவு 8 மணிக்கு ஆரம்பித்த டின்னர் பல மணி நேரம் தொடர்ந்ததாம்.

வெளியில் ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்கள்

வெளியில் ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டோணி வீட்டில் விருந்து என்ற தகவல் பரவியவுடன் ஏராளமான ரசிகர்கள் வீட்டுக்கு வெளியே கூடி விட்டனர். அத்தனை பேரும் விருந்து முடியும் வரை எங்கேயும் போகாமல் காத்திருந்து பார்த்து மகிழ்ந்தனர்.

அவங்களுக்கெல்லாம் சாப்பாடு இல்லையாம்

அவங்களுக்கெல்லாம் சாப்பாடு இல்லையாம்

காத்திருந்த ரசிகர்களுக்கு டோணி வீட்டில் விருந்து ஏதும் கொடுத்தனரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் பெருந்தன்மையுடன் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் கால் கடுக்க காத்திருந்தனர்.

டாட்டா காட்டுவோம்ல

டாட்டா காட்டுவோம்ல

விருந்துதான் வைக்கவில்லையே தவிர, விருந்துக்கு வந்த வீரர்களை வழியனுப்ப வெளியே வந்த டோணி, ரசிகர்களைப் பார்த்து நன்றாக கை காட்டி குஷிப்படுத்தத் தவறவில்லை.

Story first published: Thursday, September 26, 2013, 17:26 [IST]
Other articles published on Sep 26, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+