Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த விண்டேஜ் ஹேர்ஸ்டைல பாருங்கப்பா..தாயகம் திரும்பிய தல தோனி.. ரசிகர்களுக்காக செய்த சம்பவம்!

ராஞ்சி: அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, அண்மையில் ராஞ்சி வந்திருந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி. கடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஐபிஎல் தொடரின் போதே காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

MS Dhoni seen with Vintage Haristyle during the Vinayagar Chathurthi Celebrations in Mumbai

பின்னர் காயத்தில் இருந்து குணமடைந்த தோனி, தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதன் பின் மீண்டும் பழைய ஃபிட்னஸை எட்டிய தோனி, திடீரென விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடு பறந்தார். தோனி எங்கு விடுமுறையை கழிக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில், திடீரென யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் மோதிய போட்டியை நேரில் கண்டுகளித்தார்.

இதன் மூலம் தோனி விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்கா சென்றது தெரிய வந்தது. அதன்பின் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் கோல்ப் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகியது. அதேபோல் தோனியின் ஹேர்ஸ்டைலும் மாற்றமடைந்திருந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தோனி மீண்டும் இந்தியா வந்தார்.

MS Dhoni seen with Vintage Haristyle during the Vinayagar Chathurthi Celebrations in Mumbai

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. இதன்பின் சொந்த ஊரான ராஞ்சிக்கு செல்லாம்ல் தோனி மும்பையிலேயே இருக்கிறார். மும்பையில் தோனியை பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தோனி கலந்துகொண்டுள்ளார்.

அந்த வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தோனியின் வரவுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பலரும், தோனி வந்தபின் உற்சாகமாகினர். பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப தோனி பூக்களை எடுத்து விநாயகரை நோக்கி வீசுகிறார். அதேபோல் இந்த வீடியோவில் தோனி முற்றிலும் பழைய விண்டேஜ் ஹேர்ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் பழைய ஹேர்ஸ்டைலுடன் தோனி தோன்றவுள்ளார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Thursday, September 21, 2023, 16:05 [IST]
Other articles published on Sep 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+