Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சி.எஸ்.கே ரசிகர்களே... சீக்கிரம் நீங்கள் சித்தப்பா ஆகப்போறீங்க...!

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி விரைவில் தந்தையாக போகிறாராம்.

இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான கேப்டனாக தொடர்பவர் எம்.எஸ்.டோணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இவரே கேப்டன். சென்னை அணியின் தொடர்ச்சியான வெற்றிகளால் புழகாங்கிதம் அடைந்துள்ள, தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இவரை 'எங்க தல' என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

MS Dhoni set to become a father soon

'சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய விசில் அடிங்க...', 'எங்க தல டோணிக்கு பெரிய விசில் அடிங்க..' போன்ற சிஎஸ்கேவின் உற்சாக பாடல்கள் வெகு பிரபலம். டோணிக்கும் சாக்ஷிக்கும் நடுவே 2010, ஜூலை 4ம்தேதி திருமணம் நடைபெற்றது. இதனால் சென்னை ரசிகர்களுக்கு சாக்ஷி அண்ணியாகிவிட்டார்.

திருமணமாகி 4 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், டோணி குடும்பத்தில் குவா... குவா சத்தம் விரைவில் கேட்கப் போகிறதாம். வட இந்திய ஊடகங்கள் சில, சாக்ஷி கர்ப்பவதியாகியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே, டோணி இலங்கைக்கு எதிரான நடப்பு ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்து வருகிறார். மகிழ்ச்சி செய்தி தந்த மனைவியுடன், பொழுதை கழிக்கவே டோணி கிரிக்கெட்டில் ஆப்சென்ட் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ, டோணிக்கு குழந்தை பிறந்ததும், 'சின்ன தல பிறந்ததற்கு பெரிய விசில் அடிங்க' என அந்த குழந்தையை தங்கள் அண்ணன் குழந்தையாக நினைத்து விசில்போட தயாராகிவிட்டனர் தமிழக ரசிகர்கள்.

Story first published: Tuesday, November 11, 2014, 13:46 [IST]
Other articles published on Nov 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+