For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Dhoni: சேப்பாக்கத்தில் வரலாறு.. தோனி மாபெரும் மைல்கல் சாதனை.. டி20 போட்டிகளில் புதிய சாதனை

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இன்று நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், மிகப்பெரும் டி20 மைல்கல் சாதனை ஒன்றை நிகழ்த்த இருக்கிறார். தோனி இதுவரை 399 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் அவர் களமிறங்கும்போது, அது அவரது 400வது டி20 போட்டியாக அமையும்.

இந்திய அளவில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 400 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். விராட் கோலி 407 டி20 போட்டிகளிலும், தினேஷ் கார்த்திக் 412 டி20 போட்டிகளிலும், ரோகித் சர்மா 456 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தோனி தற்போது 400 டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக இருப்பார்.

MS Dhoni set to play 400th T20 match in IPL 2025 joins elite Indian club

தோனி இதுவரை 399 டி20 போட்டிகளில் விளையாடி, 7566 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 38.02 என்பதாகும். 28 அரை சதங்களை அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 84 நாட் அவுட் ஆகும். அவர் விக்கெட் கீப்பராக 318 விக்கெட் வீழ்ச்சிகளில் (கேட்ச், ஸ்டம்பிங்) ஈடுபட்டுள்ளார்.

சர்வதேச அளவில் இதுவரை 23 வீரர்கள் 400 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த கீரன் பொல்லார்ட் 695 டி20 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் இருக்கிறார். டுவைன் பிராவோ 582 டி20 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் 557 டி20 போட்டிகளில் விளையாடி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

2025 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி சுருக்கம்:

  • தோனி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது 400வது டி20 போட்டியில் விளையாட உள்ளார்.

  • இந்த மைல்கல்லை எட்டும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

  • விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

  • தோனி இதுவரை 399 டி20 போட்டிகளில் 7566 ரன்கள் எடுத்துள்ளார் (சராசரி 38.02, 28 அரை சதங்கள், அதிகபட்சம் 84 நாட் அவுட்).

  • விக்கெட் கீப்பராக 318 விக்கெட் வீழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

  • சர்வதேச அளவில் 23 வீரர்கள் 400 டி20 போட்டிகளை கடந்துள்ளனர்; கீரன் பொல்லார்ட் அதிக போட்டிகள் விளையாடியவர் (695).

  • நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்புக்காகப் போராடி வருகிறது.

Story first published: Friday, April 25, 2025, 11:12 [IST]
Other articles published on Apr 25, 2025
English summary
MS Dhoni set to play 400th T20 match in IPL 2025, joins elite Indian club
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+