2024 டி20 உலககோப்பையில் தோனி தான் கேப்டன்.. கிரிக்கெட் விமர்சகர் நாணி சொன்ன விஷயம்
சென்னை : 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டனாக தோனி தான் செயல்பட வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர் நாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக youtube சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் டி20 உலக கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் எந்த மாதிரி அணியை உருவாக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் வென்று ஒரே போட்டியில் தோல்வி அடைந்ததால் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை நீக்கிவிட்டு ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களை கொண்டு வர வேண்டும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை டி20 யில் சீனியர்களும் ஜூனியர்களும் கலந்த வகையில் இருக்க வேண்டும். என்னை கேட்டால் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும். அதேசமயம் இளம் வீரர்களுக்கும் சரிசமமான முறையில் வாய்ப்பு வழங்க வேண்டும். அனுபவமும் திறமையும் ஒன்றிணைந்தால் நிச்சயம் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்.
ரோகித் சர்மா அணியில் இருந்தாலும் புதிய ஒரு யோசனையாக ஹர்திக் பாண்டியாவை டி20 கேப்டனாக செயல்பட வைக்கலாம். சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்களை தோனி வழி நடத்தி இருக்கிறார். ஜாம்பவான் வீரர்களை தலைமை தாங்குவதன் மூலம் உங்களுக்கு நம்பிக்கை அதிக அளவில் இருக்கும். இதே போல் ஹர்திக் பாண்டியாவை ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோருக்கு தலைமை தாங்க சொன்னால் அவருடைய நம்பிக்கையும் அதிகரிக்கும்.
இல்லையென்றால் ஒன்று செய்யலாம் பேசாமல் நமது தல தோனி இந்திய அணி கேப்டனாக டி20 உலக கோப்பைக்கு கொண்டு வரலாம். ஏனென்றால் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். பேட்டிங்கில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் சிக்ஸர்களாக அடித்தார். விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக பணியாற்றுகிறார். அதற்கு மேல் தற்போது 2023 ஐபிஎல் தொடரையும் கைப்பற்றி இருக்கிறார்.
இப்படி இருக்க தோனியை நீங்கள் ஏன் கேப்டனாக கொண்டு வரக்கூடாது. தோனி அணியில் இருந்தால் நிச்சயம் வித்தியாசமான முறையில் யோசித்து அணிக்கு வெற்றியை பெற்று தருவார். தோனியை கேப்டனாக கொண்டு வாருங்கள் ஒரு டி20 உலக கோப்பையை அவர் வாங்கித் தருவார் என்று கிரிக்கெட் விமர்சகர் நானி தெரிவித்துள்ளார்.
Story first published: Saturday, December 9, 2023, 13:09 [IST]
Other articles published on Dec 9, 2023


Click it and Unblock the Notifications