Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி.. நீ வேணாம் போய்ரு.. போய்ரு.. போய்ரு.. சொல்ல ஆரம்பிச்சுட்டாங்கப்பா!

சென்னை: வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் தொடர் வெற்றி.. இந்த நேரத்திற்காக கொட்டாவி விட்டுக் காத்திருக்கும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது... டோணி அன் கோவினரின் சொதப்பல் ஆட்டத்தால்.

நியூசிலாந்துடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலாவது இதைச் சாதிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வாய் வரை எட்டி விட்ட வெற்றி வாய்ப்பை 2வது டெஸ்ட் போட்டியில் நழுவ விட்டு மனதுக்கு நமைச்சலைக் கொடுத்து விட்டனர் இந்திய அணியினர்.

இதனால் கேப்டன் டோணி மீது பலரின் அதிருப்தியும் திரும்பியுள்ளதாம். டோணிக்கு பேசாமல் ஓய்வளிக்க வேண்டும் என்று குரல்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன.

நான்கு மெகா தொடர் தோல்விகள்

நான்கு மெகா தொடர் தோல்விகள்

டோணி தலைமையில் வெளிநாடுகளில் நான்கு டெஸ்ட் தொடர்களை அடுத்தடுத்து இந்தியா இழந்துள்ளது. இதனா்தான் அவருடைய கேப்டன்ஷிப் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

ஒரு நாள் - டுவென்டி 20க்கு மட்டுமே போதாதா

ஒரு நாள் - டுவென்டி 20க்கு மட்டுமே போதாதா

இதனால் அவரை டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து எடுத்து விட்டு ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக தொடர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

2011 முதலே இலவுதான்..

2011 முதலே இலவுதான்..

2011 ஜூன் மாதம் முதலே இந்திய அணி வெளிநாட்டில் எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் வென்றதில்லை. கடந்த 3 ஆண்டுகளாக நாம் ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வெளியில் போய் வெல்ல முடியாத அவலம் தொடர்கிறது.

14 டெஸ்ட்டில் விளையாடி

14 டெஸ்ட்டில் விளையாடி

கடந்த 3 ஆண்டுகளில் நாம் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளோம். அதில் 10ல் தோற்றுள்ளோம். 4 போட்டிகள் டிராவாகியுள்ளன.. நாம் டிராயர் கழன்று போய் நிற்கிறோம்.

இங்கிலாந்தில் ஆரம்பித்தது

இங்கிலாந்தில் ஆரம்பித்தது

2011 இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போதுதான் இந்த தொடர் தோல்வி தொடங்கியது. அப்போது நம்மை 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்து வதைத்து விரட்டியது. பின்னர் அதே போல 2012ல் ஆஸ்திரேலிய அணி நம்மை 0-4 என்ற கணக்கில் விரட்டியடித்தது. 2013 டிசம்பரில் 0-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவில் போய் அடி வாங்கினோம். இப்போது நியூசிலாந்துக்காரர்களும் அதேபோன்ற சிகிச்சையை நமக்கு அளித்து அனுப்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் போய் தோற்ற வெற்றியாளர்

வெளிநாடுகளில் போய் தோற்ற வெற்றியாளர்

வெளிநாடுகளில் தொடர்ந்து 11 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்ற அணியின் கேப்டன் என்ற பெருமையையும் இந்த காலகட்டத்தில் டோணி பெற்றார்.

ஜூலை வரைக்கும் ஒரு டெஸ்ட்டும் கிடையாது

ஜூலை வரைக்கும் ஒரு டெஸ்ட்டும் கிடையாது

அடுத்து, வருகிற ஜூலை மாதம் வரை வெளிநாட்டில் இந்தியாவுக்கு எந்த சோதனையும் கிடையாது.. அதாவது டெஸ்ட் போட்டிகள் எதுவும் இல்லை.

இங்கிலாந்து ரப்பர் காத்திருக்கிறது

இங்கிலாந்து ரப்பர் காத்திருக்கிறது

அடுத்து நாம் இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிக்குத் தயாராக வேண்டியுள்ளது. அப்போட்டித் தொடரில் புதிய கேப்டனை இந்தியா பார்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

பார்க்கலாம்...

Story first published: Tuesday, February 18, 2014, 15:56 [IST]
Other articles published on Feb 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+