For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உதவி செய்த நண்பனையே அக்காவுக்கு கட்டி வைத்த தோனி.. தலயின் குடும்ப ரகசியம்

ராஞ்சி : உழைப்பால் ஒரு குடும்பமே வேற லெவலுக்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நமது தல தோனி தான். தோனியின் குடும்பம் சாதாரண மிடில் கிளாஸாக தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் தோனி தனது கிரிக்கெட்டின் மூலம் தற்போது உலக அளவில் மிகப் பணக்கார கிரிக்கெட் வீரராக விளங்கி வருகிறார்.

இந்த நிலையில் தோனியின் குடும்பம் குறித்து நமக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த எம் எஸ் தோனி படத்தில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் காட்டப்பட்டிருந்தது.

MS Dhoni sister Jayanthi gupta who married thala best friend

அதில் தோனியின் அக்காவாக பூமிகா நடித்திருந்தார் அப்போது பலரும் தோனிக்கு அண்ணன் மட்டும்தான் இருக்கிறார். அதனை படத்தில் அக்காவாக காட்டி விட்டார்கள் என்று குறிப்பிட்டு இருந்தனர். எனினும் படத்தில் காட்டியது தான் உண்மை என்ற செய்தி தற்போது வெளிவந்திருக்கிறது.

தோனிக்கு ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் இருக்கிறார்கள். தோனிக்கு அக்கா இருக்கிறது நிறைய பேருக்கு தெரியாது. தோனியுடன் மூன்று வயது மூத்தவர் அவருடைய பெயர் ஜெயந்தி குப்தா. தோனி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு ஜெயந்தியின் ஆதரவும் இருந்திருக்கிறது.

தனது தந்தையிடம் தம்பியை கிரிக்கெட் விளையாட அனுப்புங்கள் என்று பலமுறை ஜெயந்தி குப்தா வாதாடி இருக்கிறார். தோனியின் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்காற்றிய ஜெயந்தி குப்தா குறித்து வெளியே அந்த அளவுக்கு தெரியாது காரணம் அவர் சமூக வலைத்தளத்தில் இல்லை.ராஞ்சியில் ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்து வரும் ஜெயந்தி குப்தா கௌதம் குப்தா என்ற நபரை திருமணம் செய்து இருக்கிறார்.

அந்த கௌதம் குப்தா தோனியின் மிக நெருங்கிய நண்பர் என்பது கூடுதல் தகவல். தோனி தனது இளம் வயதில் நண்பர்களிடம் நிறைய உதவிகளை பெற்றிருக்கிறார். கிரிக்கெட் பேட்டில் இருந்து அவருக்கு ஸ்பான்சர் கிடைக்கும் பல செலவுகளை நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி தோனிக்கு அவரைவிட வயதில் மூத்தவராக இருந்த கௌதம் குப்தா என்பவரை தான் தன்னுடைய அக்காவுக்கு தோனியே திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
இந்த தகவல் தற்போது தான் தெரிய வந்திருக்கிறது. தனக்கு உதவி செய்த நல்ல மனிதரை தனது குடும்ப உறுப்பினராகவே தோனி மாற்றிக் கொண்டிருக்கிறார்.

Story first published: Thursday, July 27, 2023, 17:54 [IST]
Other articles published on Jul 27, 2023
English summary
MS Dhoni sister Jayanthi gupta who married thala best friend உதவி செய்த நண்பனையே அக்காவுக்கு கட்டி வைத்த தோனி.. தலயின் குடும்ப ரகசியம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+