1 6 1 1 1 0 1 6 2 6 6 6 6 1 4 2 6 6 1....'வாவ்' டோணி!
ராஞ்சி: முதல் போட்டியில் உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றியிருந்தார் டோணி. ஆனால் நேற்று ராஞ்சியில் நடந்த 2வது போட்டியில் ஹைதராபாத் பந்து வீச்சாளர்களை அவர் நையப்புடைத்த விதத்தால் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டனர்.
வெறும் 19 பந்துகளை மட்டுமே சந்தித்த டோணி அதி வேகமாக அரைச தத்தை எட்டி கடைசியில் 63 ரன்களில் அவுட்டாகாமல் அணிக்கு ரன் உயர்வைக் கொடுத்தார்.
ஒரே ஓவரில் அவர் விளாசிய சிக்ஸர்கள் ராஞ்சியை உலுக்கி விட்டன.

ராஞ்சியில் சிக்ஸ் மழை
நேற்றைய டோணி ஆட்டத்தில் சிக்ஸர்கள் மழையாக பொழிந்தன. உள்ளூர் ரசிகர்களுக்கு களிப்பூட்டும் வகையில் சொந்த மைதானத்தில் ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் நொந்து போகும் அளவுக்கு அடித்து நொறுக்கினார் டோணி.

மொத்தம் 8 சிக்ஸர்கள்
டோணியின் இன்னிங்ஸில் மொத்தம் 8 சிக்ஸர்களை அவர் விளாசினார். ஒரு பவுண்டரியையும் விரட்டினார்.

பாவமய்யா திஸரா...
பாவம், டோணியிடம் வந்து சிக்கிக் கொண்டார் ஹைதராபாத் பந்து வீச்சாளரான திஸரா பெரைரா. அவரது ஓவரில்தான் வெளுத்துக் கட்டினார் டோணி.

பட்டையைக் கிளப்பிய 18வது ஓவர்..
திஸரா வீசிய இன்னிங்ஸின் 18வது ஓவர்தான் டோணியின் வேட்டைக் களமானது. இந்த ஓவரில் மொத்தம் 5 சிக்ஸர்களைப் பறக்க விட்டார் டோணி. அதில் நான்கு சிக்ஸர்கள் தொடர்ச்சியாக வீசப்பட்டவை.

ஒரே ஓவரில் 34 ரன்கள்..
இந்த ஒரு ஒவரில் மட்டும் திஸரா பெரைரா 34 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தமாக 3 ஓவர்களில் அவர் 60 ரன்களை வாரிக் கொடுத்தார்.

அவர் ஸ்டைலுக்கு அவரே பலியானார்...
என்ன காமெடி என்றால் சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் நடந்த டுவென்டி 20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சாளர் ராபின் பீட்டர்சன் பந்துகளை இப்படித்தான் நொறுக்கியடித்தார் திஸரா. அதுவு்ம் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசினார். தற்போது அவரது ஸ்டைலிலேயே அவருக்கு டோணி செம ஆப்பு வைத்து விட்டார்.

செம ஸ்டிரைக்...
நேற்றைய ஆட்டத்தில் டோணியின் ஸ்டிரைக் ரேட் 331.57 ஆகும்.

இதுதாங்க டோணி ஸ்கோர் கார்ட்
நேற்றைய போட்டியில் டோணி சந்தித்த 19 பந்துகளில் அவர் எடுத்த ரன்கள் விவரம் இதோ.... 1 6 1 1 1 0 1 6 2 6 6 6 6 1 4 2 6 6 1.


Click it and Unblock the Notifications