Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2019 ஜூலை 10.. மனதளவில் அன்றே ஓய்வுபெற்றுவிட்டேன்.. உலகக்கோப்பை தோல்வி பற்றி தோனி நெகிழ்ச்சி!

பெங்களூரு: 2019ஆம் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்த பின் இந்திய அணியின் தோனி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் சிறு குழந்தைகள் போல் ஓய்வறையில் கண் கலங்கியதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியிருந்தார். பெரும்பாலும் உணர்வுகளை வெளிப்படுத்தாத தோனி கதறி அழுதார் என்று கூறியது அவரது ரசிகர்களை கலங்க வைத்தது.

MS Dhoni spoke about the high emotions after the lost against New Zealand in the 2019 World Cup Semi Final

இந்த நிலையில் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி தோல்வி குறித்தும், சஞ்சய் பங்கர் பகிர்ந்த விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, மிகமுக்கியமான போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடையும் போது உணர்வுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று.

ஒவ்வொரு போட்டிக்கும் எனக்கான திட்டங்களை தயாராக வைத்தே களமிறங்குவேன். அதேபோல் அன்றைய ஆட்டம் இந்திய அணிக்காக எனக்கு கடைசி போட்டியாக அமைந்தது. என்னை பொறுத்தவரை அன்றைய நாளிலேயே ஓய்வுபெற்றுவிட்டேன். அறிவிப்பு வேண்டுமானால் ஒரு ஆண்டுக்கு பின் வந்திருக்கலாம். ஆனால் அன்றைய தினமே ஓய்வுபெற்றுவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.

பயிற்சியாளர்களிடம் இருந்து பேட்ஸ்மேன்கள் பயிற்சிக்காக சில தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கப்படும். நான் ஒவ்வொரு முறை பயிற்சியாளரை பார்க்கும் போது, அந்த தொழில்நுட்ப சாதனங்களை திருப்பி கொடுத்தேன். ஆனால் அதனை பயிற்சியாளர் பெற மறுத்தார். அவரிடம் இதற்கு மேல் இது எனக்கு தேவையில்லை என்று எப்படி அவரிடம் கூற வேண்டும் என்று தெரியவில்லை. அதனால் உடனடியாக நான் ஓய்வை அறிவிக்கவில்லை.

MS Dhoni spoke about the high emotions after the lost against New Zealand in the 2019 World Cup Semi Final

கடந்த 12 முதல் 15 ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடுவதை மட்டுமே செய்துள்ளேன். திடீரென இனி நாட்டுக்காக களமிறங்க மாட்டோம் என்ற நிலை விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வரும் சூழல். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தால், மீண்டும் இந்தியாவுக்காக களமிறங்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காது. மீண்டும் அந்த வெற்றியை பெற முடியாது என்று தெரிய வரும் போது, மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கு அளவேயில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணியின் உலகக்கோப்பை செயல்பாடுகள் குறித்து தோனியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்திய அணியில் பேலன்ஸ் சிறப்பாக உள்ளது. அதேபோல் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதாக நினைக்கிறேன். இதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, October 27, 2023, 15:51 [IST]
Other articles published on Oct 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+