Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிலுசிலு காத்து... கருமேகங்கள்... இடையில் உற்சாக பைக் பயணம்... ரசிகன்டா...

ராஞ்சி : கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தன்னுடைய பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார்.

தோனி சமூகவலைதளங்களில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அவர்குறித்து அனைத்து செய்திகளும் ரசிகர்களுக்கு சுடசுட கிடைத்துவிடும். உபயம் அவரது மனைவி சாக்ஷி தோனி.

இந்நிலையில், அழகான மேகக்கூட்டங்கள், மின்னல், சிலுசிலு காற்று இதற்கு இடையில் தோனி தன்னுடைய மகள் ஜிவாவுடன் மேற்கொண்ட பைக் பயணத்தை சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 ரசிகர்களின் விருப்பத்திற்குரியவர்

ரசிகர்களின் விருப்பத்திற்குரியவர்

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின்பு சர்வதேச போட்டிகளில் இருந்து விளையாடாமல் விலகியிருக்கிறார். அவரது ஆட்டத்தை மீண்டும் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் பரபர

சமூக வலைதளத்தில் பரபர

இந்நிலையில் இந்த லாக்டவுன் காலத்தை தன்னுடைய குடும்பத்தினருடன் தன்னுடைய பண்ணை வீட்டில் கழித்து வருகிறார் தோனி. அவர் சமூக வலைதளங்களில் அதிகமாக செயல்படுவதில்லை. ஆனால் அவர் குறித்த செய்திகள் அனைத்தும் ரசிகர்களுக்கு உடனுக்குடன் கிடைப்பதற்கு சாக்ஷி தோனி காரணமாக உள்ளார். அவர் சமூகவலைதளங்களில் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறார்.

திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டேன்

திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டேன்

சமீபத்தில் சிஎஸ்கே வலைதளத்திற்காக இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஈடுபட்ட சாக்ஷி தோனி, தோனியுடனான முதல் சந்திப்பு, அவரது ஆரம்ப கால ஹேர்ஸ்டைல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பகிர்ந்து கொண்டார். தோனியின் ஆரம்ப கால நீண்ட தலைமுடி தனக்கு பிடிக்காது என்றும், அப்போது அவரை சந்தித்திருந்தால் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மகளுடன் பைக் பயணம்

மகளுடன் பைக் பயணம்

இந்நிலையில் தற்போது பண்ணை வீட்டில் இருக்கும் தோனி அண்டு கோவினர், அழகான மாலைப் பொழுதில், சிலுசிலு காற்று, மின்னல், மேகக்கூட்டங்களுடன் கூடிய வானிலையை சிறப்பாக என்ஜாய் செய்துள்ளனர். அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சாக்ஷி தோனி. இதற்கு இடையில் தோனி தன்னுடைய மகள் ஜிவாவுடன் மேற்கொண்ட பைக் பயணமும் அந்த வீடியோவில் காணப்படுகிறது. வாழ்க்கையை நல்லாத்தான் என்ஜாய் பண்றார் 'தல'.

குட்டி தேவதையின் பதில்

குட்டி தேவதையின் பதில்

தன்னுடைய சிறு வயதில் தனக்கு மின்னலை கண்டால் பயம் என்று அந்த வீடியோவில் சாக்ஷி தோனி, ஜிவாவிடம் கூறுகிறார். அதற்கு அந்த குட்டி தேவதை, தனக்கு மின்னலை கண்டெல்லாம் பயம் கிடையாது என்று உடனடியாக பதிலளிக்கிறது. இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப அந்த பதில் காணப்படுகிறது.

Story first published: Wednesday, June 3, 2020, 20:11 [IST]
Other articles published on Jun 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+