Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் மனசு இருக்கே.. வேற லெவல்!! சென்னையில் ரசிகருக்காக தல செய்த காரியம்.. குவியும் பாராட்டு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தனது ரசிகருக்காக செய்த காரியம், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Dhoni-யின் Surprise Visit! Fan-க்காக Chennai வந்தார் | #Trending | OneIndia Tamil

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் எதிர்பார்த்தது போல் சிஎஸ்கே அணிக்கு அமையவில்லை. இந்த நிலையில், நடப்பு சீசனுக்கு பிறகு கேப்டன் தோனி முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளார்.

தோனி திருமண நிகழ்ச்சி அல்லது டிஎன்பிஎல் குறித்து பங்கேற்பதற்காக சென்னை வந்ததாக தகவல் வெளியானது.

MS Dhoni surprise Visits to Her Physically challenged fan home

ஆனால், நேரடியாக சென்னையில் தனது மாற்றுத் திறனாளி ரசிகையை தோனி அவரது இல்லம் தேடி சென்று சந்தித்தார். அப்போது லாவண்யா என்ற அந்த ரசிகை, தோனியின் ஓவியத்தை வழங்கினார். இதனை பார்த்த தோனி அவருக்கு கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லாவண்யா, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தோனியை பார்த்ததை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. அவர் மிகவும் எளிமையாகவும், பழுகுவதற்கு இனிமையான மனிதராக இருந்தார். என் பெயரின் ஸ்பெலிங்கை கேட்டு அறிந்தார். அப்போது என் கண்ணில் வழிந்த நீர்த்துளியை துடைத்துவிட்ட தோனி, அழக்கூடாது என்று சொன்னார்.

இது என் வாழ்நாளில் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம். தோனி என்னுடன் பேசிய வார்த்தைகளை எப்போதும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். சாகும் வரை தோனியின் ரசிகையாக தான் இருப்பேன் என்றும் இந்த பெண் தெரிவித்துள்ளார். ரசிகை வீட்டுக்கு தோனி அடித்துள்ள சர்ப்பிரைஸ் விசிட் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Story first published: Wednesday, June 1, 2022, 8:46 [IST]
Other articles published on Jun 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+