"ஹெலிகாப்டர்" மட்டுமில்ல பாஸ்.. ராக்கெட்டே பறக்கப் போகிறது.. இன்று மாலை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்...
சென்னை: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் டோணி, மோஹித் சர்மா, பத்ரிநாத், பவந் நேகி உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் கலந்து கொண்டு சிக்ஸர் விளாசும் போட்டி இன்று மாலை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சிக்ஸர் விளாசும் போட்டியைத் தொடர்ந்து தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இந்த ஆண்டு சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆல்பர் டூட்டி பேட்ரியாட்டும், திண்டுக்கல் டிராகன் அணியும் மோதவுள்ளன.
2வது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டோணி அடிக்கப் போகும் சிக்ஸரைக் காண ரசிகர்கள் சேப்பாக்கத்தில் இன்று மாலை குவிகின்றனர்.

ஹெய்டன்
இந்த நட்சத்திர சிக்ஸர் விளாசும் போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன், அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். பவுலிங் மெஷினிலிருந்து சீறிப் பாயும் பந்துகளை சிக்ஸருக்கு இவர்கள் விரட்டுவார்கள்.

பாலாஜியும்
இந்த நிகழ்ச்சியில் எல் பாலாஜி, முரளி விஜய், சி. கணபதி ஆகிய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிட்டெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

மீண்டும் திரும்பும் கிங்குகள்
டோணி, முரளி விஜய், பாலாஜி உள்பட மேற்கண்ட அத்தனை வீரர்களும் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறுவர் என்று கூறப்படுகிறது.

ஒரு மணி நேரம்
இன்று மாலை 6 மணிக்கு இந்த சிக்ஸர் விளாசும் போட்டி தொடங்கி 7 மணி வரை நடைபெறும். அதன் பின்னர் தொடக்க விழா நடைபெறும். அதையடுத்து டாஸ் போடப்பட்டு முதல் போட்டி 7.15க்கு தொடங்கும்.


Click it and Unblock the Notifications