தமிழில் வெளிவந்து சக்கை போடு போடும் டோணி டிரைலர் !
மும்பை: டோணியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் MS Dhoni: The Untold Story பாலிவுட் படத்தின் டிரெய்லர் புயலைக் கிளப்பியிருந்த நிலையில் தற்போது படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி Youtube இணையதளத்தை கலக்கி வருகிறது.
ஐந்து நாட்களுக்கு முன் ஹிந்தியில் வெளிவந்த "எம்.எஸ்.தோனி- தி அன் டோல்டு ஸ்டோரி" படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் டோணி வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது 1 கோடிக்கு மேல் பார்வையாளர்களையும், 3 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற இப்படத்தின் டிரைலர், இப்போது
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கினங்க தமிழில் இந்த படத்திற்கான டிரைலர் வெளியிடப்பட்டது.
வெளியிட்ட சில மணி நேரங்களிலே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்று விட்டது. இதில் டோனியின் சொல்லப்படாத வாழ்க்கை பக்கங்கள் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் டோனியின் ஒவ்வொரு அசைவையும் படத்தின் இயக்குநர் நீராஜ் பாண்டே அற்புதமாக காட்டியுள்ளார்.
இந்த டிரெய்லருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications