MS Dhoni: சிஎஸ்கே அணியுடன் கருத்து வேறுபாடு.. தோனி அணியை விட்டு விலக முடிவு என தகவல்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி, ஐபிஎல் 2026 சீசனுக்குப் பிறகு அணியில் இருந்து விலகுவார் என்ற தகவல் ஒன்று வெளியாகி இருப்பது, அவரது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகத்துடனான உறவு சீர்கேடு, வீரர்கள் தேர்வு குறித்த கருத்து வேறுபாடுகள், மற்றும் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணியின் திட்டம் ஆகியவை இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
இந்த ஐபிஎல் சீசனில் தோனி தனது ரசிகர்களை மிகுந்த பொறுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதுவரை 13 போட்டிகள் நடைபெற்ற நிலையில், முன்னாள் கேப்டன் தோனி ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை, இம்பேக்ட் சப்ஸ்டிடியூட்டாக கூட அவர் களமிறங்கவில்லை. அவரது காயம் தான் இதற்கு காரணம் என்று CSK நிர்வாகம் தொடர்ந்து கூறி வந்தாலும், அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் தற்போதைய அணியை கலைக்க அவர் விரும்பவில்லை என தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஐபிஎல் 2026 சீசனுக்குப் பிறகு தோனி CSK அணியிலிருந்து பிரிந்து செல்வார் என்று ஒரு புதிய அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த சீசனுக்குப் பிறகு தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் காணப்பட மாட்டார். "தோனிக்கும் CSK நிர்வாகத்திற்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாகிவிட்டது; 2026 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு 'தல' மஞ்சள் சீருடையில் இருக்க மாட்டார்," என செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும், நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகளும், மூத்த வீரர்களை படிப்படியாக வெளியேற்றும் நீண்டகால திட்டமும், இந்த விவகாரத்தில் முக்கிய ரணங்களாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தோனியிடம் அணி நிர்வாகம் எந்த ஆலோசனையும் செய்யவில்லை என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களின் முக்கிய ஒப்பந்த முடிவுகள் அவரது விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்பட்டதாகவும், இது குறித்து தோனிக்கு புடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், இளம் வீரர்களைக் கொண்ட எதிர்கால அணியை உருவாக்குவதில் உரிமையாளர் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிகிறது.
"இந்த ஆண்டு அவர்கள் தோனியை முழுவதுமாகப் புறக்கணித்தனர், இது அவருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது. ஆனாலும், தோனி அணியின் மீது கொண்ட மரியாதை காரணமாகவே இந்த சீசன் முழுவதும் அவர்களுடன் தங்கி இருந்ததாகவும், தனது மனக்குறைகள் இருந்தபோதிலும், அணிக்கு தான் ஆற்றவேண்டிய கடமையில் இருந்து அவர் விலகவில்லை.
தனது ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக, தோனி கிட்டத்தட்ட ஒரு முழு சீசனையும் தவறவிட்டார். ஒரு மூத்த CSK அதிகாரியுடன் அவருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் கூறப்பிடுகிறது. இதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ள அஸ்வின், என். ஸ்ரீனிவாசன், சிஎஸ்கே அணியை கவனித்த போது, தோனி இது போல் எந்த விசயத்திலும் ஒதுங்கி இருந்திருப்பாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதனால், தோனிக்கும், சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது.


Click it and Unblock the Notifications

