Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, கம்பீர், ரிஷப் பண்ட்.. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? முழு பட்டியல்

மும்பை: 2026 ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதில் எந்த வீரர் அதிக விலைக்குப் போவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தச் சூழலில், 2008 முதல் 2025 வரை நடந்த ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.

கடந்த ஆண்டு (2025) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு வாங்கியதே இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஏலத் தொகையாக உள்ளது. இந்தப் பட்டியலில் தோனி தொடங்கி, தற்போதைய இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர், வருண் சக்கரவர்த்தி என பலரும் இடம் பெற்றுள்ளனர்.

MS Dhoni to Rishabh Pant Full List of Most Expensive Players in IPL Auction History from 2008 to 2025

ஆண்டுவாரியாக அதிக விலை போன வீரர்கள்:

2008 - எம்.எஸ்.தோனி (CSK): முதல் ஐபிஎல் ஏலத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 'தல' தோனியை 1.5 மில்லியன் டாலருக்கு (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி) வாங்கியது.
2009 - கெவின் பீட்டர்சன் (RCB) & ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் (CSK): இங்கிலாந்து ஜாம்பவான்களான இருவரும் தலா 1.55 மில்லியன் டாலருக்கு ஏலம் போனார்கள்.
2010 - கீரான் பொல்லார்ட் (MI) & ஷேன் பாண்ட் (KKR): தலா 750,000 டாலருக்கு வாங்கப்பட்டனர்.
2011 - கவுதம் கம்பீர் (KKR): கொல்கத்தா அணி கம்பீரை 2.4 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.11 கோடி) வாங்கி கேப்டனாக்கியது.
2012 - ரவீந்திர ஜடேஜா (CSK): சென்னை அணி ஜடேஜாவை 2 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.12.8 கோடி) தட்டித் தூக்கியது.
2013 - கிளென் மேக்ஸ்வெல் (MI): மும்பை இந்தியன்ஸ் அணி 1 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
2014 - யுவராஜ் சிங் (RCB): ஆர்சிபி அணி ரூ.14 கோடி கொடுத்து யுவராஜை வாங்கியது.
2015 - யுவராஜ் சிங் (DC): டெல்லி டேர் டெவில்ஸ் (தற்போதைய டெல்லி கேப்பிட்டல்ஸ்) யுவராஜுக்காக ரூ.16 கோடியை வாரி இறைத்தது.
2016 - ஷேன் வாட்சன் (RCB): ரூ.9.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.
2017 - பென் ஸ்டோக்ஸ் (RPSG): ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.14.5 கோடிக்கு வாங்கியது.
2018 - பென் ஸ்டோக்ஸ் (RR): ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.12.5 கோடிக்கு வாங்கியது.
2019 - ஜெய்தேவ் உனத்கட் (RR) & வருண் சக்கரவர்த்தி (PBKS): தலா ரூ.8.4 கோடி.
2020 - பேட் கம்மின்ஸ் (KKR): கொல்கத்தா அணி ரூ.15.5 கோடிக்கு வாங்கியது.
2021 - கிறிஸ் மோரிஸ் (RR): ரூ.16.25 கோடி.
2022 - இஷான் கிஷன் (MI): மும்பை இந்தியன்ஸ் ரூ.15.25 கோடிக்கு மீண்டும் எடுத்தது.
2023 - சாம் கரண் (PBKS): பஞ்சாப் கிங்ஸ் ரூ.18.50 கோடி கொடுத்து சாதனை படைத்தது.
2024 - மிட்செல் ஸ்டார்க் (KKR): கொல்கத்தா அணி ரூ.24.75 கோடி கொடுத்து அனைவரையும் மிரள வைத்தது.
2025 - ரிஷப் பண்ட் (LSG): லக்னோ அணி ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு வாங்கி ஐபிஎல் வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது.

வரும் டிசம்பர் 16-ம் தேதி நடக்கவுள்ள ஏலத்தில், ரிஷப் பண்ட்டின் 27 கோடி சாதனையை யாராவது முறியடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Wednesday, December 10, 2025, 20:52 [IST]
Other articles published on Dec 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+