பாஜக அரசியலில் சிக்காத தோனி.. விவசாய போராட்டம் முதல் ராமர் கோயில் வரை.. அப்படி என்ன பிரச்சினை?
ராஞ்சி: நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு விஷயங்களையும் பாஜக அரசியலாக்குவது பலருக்கும் தெரிந்த கதைதான். தங்களுடைய அரசியலை நாட்டில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரங்களையும் வைத்து பாஜக காய் நகர்த்துவது வழக்கம்.
குறிப்பாக நாட்டில் ஏதேனும் விஷயம் நடக்கிறது என்றால் பிரபலங்களை வைத்து டிவீட் போடுவது. பிரபலங்களின் ஆதரவை கூறுவது என்று பாஜக தன்னுடைய அரசியல் காய்களை நகர்த்தும்.

சர்வ வல்லமை உடைய பாஜகவுக்கு பயந்து பல பிரபலங்களும் அவர்கள் சொல்லும் விஷயங்களை டிவிட்டாக போடுவது வழக்கம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற தலைவனாக விளங்கிய தோனி மட்டும் பாஜக அரசியலில் சிக்காமல் தப்பித்து வருகிறார். விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற போது வெளிநாட்டினர். இதில் தலையிடக்கூடாது என்று பலரும் டிவிட் செய்து வந்தனர்.
சச்சின் முதல் விராட் கோலி வரை பல கிரிக்கெட் வீரர்களும் எங்கள் நாட்டில் நடைபெறும் பிரச்சனையில் வெளிநாட்டினர் பங்கேற்க கூடாது என்று கூறி வந்தனர். ஆனால் அப்படி ஒரு டிவிட்டை தோனி போடாமல் இருந்தார். இதேபோன்று மாலத்தீவு இந்தியா இடையே பிரச்சனை ஏற்பட்டபோது பல பிரபலங்களும் மாலத்தீவை புறக்கணித்து டிவிட் போட்டனர்.
மேலும் மாலத்தீவுக்கு இனி செல்ல போவதில்லை என்றும் லட்சத்தீவு தான் எங்களுடைய சுற்றுலா தளம் என்று பலரும் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். அப்போது கூட தோனி தனது சமூக வலைத்தள பக்கத்திலிருந்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. தற்போது ராமர் கோவில் விஷயத்தில் கூட நாட்டில் உள்ள பல பிரபலங்களை நேரில் அழைத்து பிரபலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது.
ஆனால் இந்த விவகாரத்திலும் கூட தோனி தலையிடவில்லை. சச்சின் ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த நிலையில் தோனி கடைசி வரை தலையை காட்டவில்லை. இதனால் பாஜக விரிக்கும் வலையில் தோனி ஒரு முறை கூட சிக்கவில்லை என்று தமிழக ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். ஜார்க்கண்ட் அரசியல் தேர்தலில் பாஜக தோனியை வைத்து காய் நகர்த்த முயன்றதாகவும் அது தோனிக்கு பிடிக்கவில்லை என்பதால் பல சிக்கல்கள் தோனிக்கு உண்டாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் தோனி பாஜகவின் எந்த ஒரு விவகாரத்திலும் தலையிடாமல் இருக்கிறார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications