இன்னும் தீராத வெறி.. தோனிக்காக ஒரே ஒரு முறை செய்து காட்டுவாரா ரோஹித் சர்மா?
சென்னை : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, தோனிக்காக நிச்சயம் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தோனி 2011 உலகக்கோப்பை தொடரை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். அடுத்து நடந்த 2015 உலகக்கோப்பையையும் இந்தியா வெல்ல வேண்டுமென அவர் திட்டமிட்டார். ஆனால் அது நடைபெறவில்லை. பின்னர் கேப்டன் பதவியை துறந்தார்.
அணியில் மூத்த வீரராக 2019 உலகக்கோப்பை வரை தொடர்ந்து ஆடினார். அந்த உலகக்கோப்பையை வென்ற பின் தான் ஓய்வு என்பதில் தீவிரமாக இருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியா அரை இறுதிப் போட்டியுடன் அந்த தொடரில் வெளியேறியது.
அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆன போது தோனி கண்கலங்கிய நிலையில் வெளியேறினார். அதுதான் தோனி கடைசியாக ஆடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி. அத்துடன் தோனி ஓய்வை அறிவித்தார்.
ஆனாலும், இந்தியா மீண்டும் உலகக்கோப்பை வெல்லவில்லை என்ற ஏக்கம், வெறி அவரிடம் உண்மையாகவே உள்ளது. அதை தன்னால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றாலும் தற்போதைய இந்திய அணி அதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார் தோனி.
ரோஹித் சர்மா எடுக்கும் சில முடிவுகள் பல முறை கேப்டன் தோனியை நமக்கு நினைவுப்படுத்துகிறது. உதாரணத்துக்கு ஒருநாள் போட்டியே ஆடாத அஸ்வினை அணியில் சேர்த்தது எல்லாம் ஐபிஎல் தொடரில் சில காலமாக தோனி செய்த சில அதிரடி நகர்வுகள் போன்று தான் இருக்கிறது.
எனவே, ரோஹித் சர்மா நிச்சயம் தோனிக்கு பிடித்த சென்னை சேப்பாக்கத்தில் முதல் போட்டியில் வெல்வது மட்டுமின்றி, உலகக்கோப்பையையும் வென்று கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications