Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியில் தோனி! களத்தில் நின்று பயிற்சி.. சிஎஸ்கே ரசிகர்கள் இதயம் நொறுங்கியது

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருவதால் தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவே மாறி இருக்கிறார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி தடைப்பட்ட காலத்தில் புனே அணிக்காக விளையாடிய, அவர் மற்ற ஆண்டுகளில் முழுவதும் சிஎஸ்கே அணிக்காக தான் தனது உடல் பொருள் ஆவியை வழங்கியிருக்கிறார்.

வயது 43ஐ தொட்டாலும் சிஎஸ்கே அணியின் ரசிகர்களின் ஆசைக்காக தனது மூட்டு வலியையும் மீறி தோனி விளையாடி வருகிறார். பல்வேறு விமர்சனங்கள் சர்ச்சைகள் இருந்தாலும் சிஎஸ்கே அணிக்காக எதையும் தாங்கத் தயார் என்று தோனி இருந்து வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு மினி ஏலத்திற்கு முன்பு தோனி விடை பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

MS Dhoni

இந்த நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு தோனி பயிற்சியில் ஈடுபட்டது சென்னை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பொதுவாக சிஎஸ்கே அணியின் பரம எதிரி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான். ஏனென்றால் இந்த இரு அணிகளும் மோதும் போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கவனமும் சிஎஸ்கே மேல் தான் இருக்கும்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே வை விட அதிக வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தோனி ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தோனி சிஎஸ்கே அணி விட்டு சென்று விடுவாரா என்று கேள்வி எல்லாம் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

ஆனால் நடந்த விஷயமே வேறும் தோனி கிரிக்கெட்டைப் போல் கால்பந்திலும் மிகவும் ஆர்வம் உடையவர். தனது ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு சக வீரர்களுடன் கால்பந்து விளையாடி பயிற்சியிலும் ஈடுபடுவார்.பலமுறை எக்சிபிஷன் போட்டியிலும் தோனி விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் தான் நண்பர்களுடன் தோனி கால்பந்து பயிற்சியில் விளையாடிய போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்திருக்கிறார்.இதுதான் சிஎஸ்கே ரசிகர்களை சோகம் அடைய செய்திருக்கிறது. இதனிடையே, ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு தோனி அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து இறுதி முடிவு அறிவிப்பார்.

Story first published: Tuesday, October 7, 2025, 22:09 [IST]
Other articles published on Oct 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+