MS Dhoni: ஷீரடி சாய் பாபா கோயிலில் கணவர் தோனிக்காக மனைவி ஷாக்சி தோனி வழிபாடு
ஷீரடி: ஐபிஎல் 2026 தொடரில் தோனியின் பங்கேற்பு குறித்த நிச்சயமற்ற சூழல் நீடித்து வருகிறது. இச்சூழலில், அவரது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவா ஆகியோர் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடர் துவங்கும்போதே, தோனிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் இரண்டு வாரங்கள் ஓய்வு தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய எந்தப் போட்டியிலும் அவர் களமிறங்கவில்லை.

செவ்வாய்க்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஆட்டத்திலும் தோனி களமிறங்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இன்னும் முழு போட்டித் தகுதியை எட்டவில்லை. முன்னதாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 'தளபதி' விரைவில் திரும்புவார் என குறிப்பிட்டிருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்கு முன்னதாக திங்கட்கிழமை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பயிற்சி அமர்வின் இறுதியில் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். தனது பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி உள்ளிட்ட துணை ஊழியர்கள் வீசிய பந்துகளை மட்டுமே அவர் எதிர்கொண்டார்.
பயிற்சியாளர் குழுவில் உள்ள ஹஸ்ஸி வீசிய ஷார்ட் பிட்ச் பந்து ஒன்று தோனியின் பேட் எட்ஜில் பட்டு மேலெறியது. எனினும், தனக்கு வசதியான உயரத்தில் வந்த பந்துகளை மிட்விக்கெட் எல்லைக்கோட்டை நோக்கி 'பாட்டம்-ஹேண்ட்' ஸ்விங் மூலம் நொறுக்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்று மணி நேர பயிற்சி இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வலைப்பயிற்சியில் தோனி விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. 44 வயதான தோனி, இத்தொடரில் சிஎஸ்கேவின் நான்கு ஆட்டங்களையும் தவறவிட்டுள்ளார். கவுஹாத்தி மற்றும் பெங்களூருவில் நடந்த வெளி மாநில ஆட்டங்களுக்கும் அவர் அணியுடன் செல்லவில்லை


Click it and Unblock the Notifications