Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி தாங்க எல்லாம்…!! இந்த உலகத்தில அவரை மிஞ்ச ஆளே இல்லை…!!

மும்பை:நடப்பு உலக கோப்பை தொடரில் தோனியை மிஞ்ச ஆளே இல்லை என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. லண்டனில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. ஜூன் 6ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

உலக கோப்பைக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். தற்போது இந்திய அணி வீரர்கள் உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து புறப்பட்டனர்.

ரவி சாஸ்திரி பேட்டி

ரவி சாஸ்திரி பேட்டி

இது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது: உலக கோப்பை தொடரில் தோனியின் பங்கு என்பது மிக, மிக முக்கியமான ஒன்று. சில ஆண்டுகளாக கீப்பிங்கில் சிறந்து விளங்கும் தோனியை மிஞ்ச சிறந்த விக்கெட் கீப்பர் வேறு யாரும் இல்லை.

தோனியின் சாதுர்யம்

தோனியின் சாதுர்யம்

கேட்ச் பிடிப்பதில் மட்டுமல்ல, ஸ்டெம்பிங், ரன் அவுட் செய்வது என அனைத்து துறைகளிலும் அவர் சிறந்து விளங்குகிறார். ஒரு ஆட்டத்தின் முடிவையே மாற்றும் திறமை, சாதுர்யம் அவரிடம் இருக்கிறது. அவரை விட ஒரு சிறந்த வீரர் யாரும் இல்லை.

கடுமையான சவால்

கடுமையான சவால்

மேலும் ஐபிஎல்லில் அவரது பேட்டிங்கை மறக்க முடியாது. இந்த உலக கோப்பை தொடரில் மிக முக்கியமான வீரர்களில் தோனியும் ஒருவர்.. அனைத்து அணிகளும் வலுவாக உள்ளதால், உலக கோப்பை தொடர் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

மாற்றிக் கொள்வோம்

மாற்றிக் கொள்வோம்

சூழ்நிலைகளுக்கு தகுந்த மாதிரி, களத்தில் எங்களின் விளையாடும் அணுகு முறையை மாற்றிக் கொள்வோம். இளமையும், அனுபவமும் கலந்த அணியை தேர்வு செய்திருக்கிறோம். மேற்கிந்தி தீவுகள் அணி எல்லாரும் சொல்வதையும் விட மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது என்றார்.

Story first published: Wednesday, May 22, 2019, 12:53 [IST]
Other articles published on May 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+