Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்ளோ அடிச்சாலும் தாங்கிப்பாரு... பதற்றமே அடைய மாட்டாரு... கேப்டன் கூல் குறித்து பிராவோ பெருமிதம்

சென்னை : முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் தாங்கிக் கொள்வார் என்று மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

Recommended Video

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்கள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

மேலும் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் தோனி பதற்றமடைய மாட்டார் என்றும் அணியின் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.

தற்போது சிஎஸ்கே அணியினர் துபாயில் முகாமிட்டுள்ள நிலையில், அந்த அணியின் வீரர் டுவைன் பிராவோ கரீபியன் பிரீமியர் லீக் தொடரை முடித்த பின்பே அணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர்

மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் எம்எஸ் தோனியின்கீழ் இணைந்து விளையாடி வருகிறார் மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ. ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி இதுவரை 3 கோப்பைகளை கைப்பற்றியுள்ள நிலையில், அணியின் வெற்றிகளின்போது தோனியுடன் இருந்தவர் பிராவோ. மேலும் தோனிக்கு மிகவும் விருப்பமான ஆல்-ரவுண்டர் இவர்.

சிபிஎல்லில் ஆடிவரும் பிராவோ

சிபிஎல்லில் ஆடிவரும் பிராவோ

தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் பிராவோ, அதை முடித்துக் கொண்டு அடுத்த மாதத்தில்தான் சிஎஸ்கே அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி எந்த சூழ்நிலையிலும் பதற்றமே அடைய மாட்டார் என்று பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தோனி

நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தோனி

அணியில் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் தோனி அதை அமைதியாக எதிர்கொள்வார் என்றும் பிராவோ கூறினார். மேலும் தன்னுடைய அணி வீரர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையை ஏற்படுத்துவார் என்றும் ஒரு சிறந்த கேப்டனின் முக்கிய குணமாக இது இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து அணியிலும் சிறப்பான வீரர்கள்

அனைத்து அணியிலும் சிறப்பான வீரர்கள்

அனைத்து ஐபிஎல் அணிகளிலும் சிறப்பான வீரர்கள் உள்ளதால், அவர்கள் அனைவரும் யூஏஇயின் ஸ்லோ பிட்ச்க்கு தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்று கூறிய பிராவோ, சிஎஸ்கேவிற்கு மட்டும் சாதகமாக இந்த பிட்ச்கள் இருக்கும் என்று கூற முடியாது என்றும் கூறியுள்ளார். கீரன் பொல்லார்ட் மற்றும் ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகிய சக வீரர்களுக்கு பௌலிங் போடுவது கடினமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, August 26, 2020, 18:45 [IST]
Other articles published on Aug 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+