Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னால் இதுக்கு மேல முடியாது”.. ரிட்டையர்மென்ட் தேதியை சொன்ன தோனி.. சிஎஸ்கே வட்டாரத்தில் தகவல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், மூத்த வீரருமான தோனி, தனது ஐபிஎல் பயணத்தின் இறுதி தேதியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரே தனது கடைசி சீசனாக இருக்கும் என்று தோனி, அணி நிர்வாகத்திடமும், தனக்கு நெருக்கமானவர்களிடமும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவரது கடைசி போட்டி எது என்பதை ஓரளவு ஊகிக்கும் வகையில்தான் 2026 ஐபிஎல் தொடர் திட்டமிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

MS Dhoni s Final Season Thala Informs CSK Management of Retirement Plans

கடந்த சில ஆண்டுகளாகவே, ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் முடிவிலும் தோனியின் ஓய்வு குறித்த விவாதங்கள் எழுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் புதிரான புன்னகையுடன் அதைக் கடந்து செல்லும் தோனி, இந்த முறை தனது முடிவில் தெளிவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

44 வயதான தோனி, தனது உடற்தகுதி அனுமதிக்கும் வரை தொடர்ந்து விளையாடவே விரும்புகிறார். இருப்பினும், 2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஒரு வீரராக தனது பயணத்தை முடித்துக்கொள்ள அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசி சீசனுக்கான பிரம்மாண்ட ஏற்பாடு

தனது கடைசி சீசனை மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் வகையில், தோனி தற்போதே கடுமையான பயிற்சிகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. உடற்பயிற்சிக் கூடம், கிரிக்கெட் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் என ஓய்வின்றி அவர் உழைத்து வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஐபிஎல் தொடருக்காக அவர் தீவிர பயிற்சி செய்து வருகிறார். ஆனால், இதுவே கடைசி ஆண்டாக இருக்கும்.

சிஎஸ்கே உடன் தொடரும் பந்தம்

ஒரு வீரராக ஓய்வு பெற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தனது பந்தம் எப்போதும் தொடரும் என்பதை தோனி சமீபத்தில் உறுதி செய்திருந்தார். "நானும் சிஎஸ்கே-வும் இணைந்தே இருப்போம். இன்னும் 15-20 ஆண்டுகளுக்கு இந்தக் கூட்டணி தொடரும். ஆனால், நான் அத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என்று நினைக்க வேண்டாம்" என்று ஒரு நிகழ்ச்சியில் அவர் சிரித்தபடி கூறினார்.

இது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தாலும், அவரது ஓய்வு நெருங்கிவிட்டதையே சூசகமாக உணர்த்தியது. வீரராக இல்லாவிட்டாலும், மஞ்சள் ஜெர்சியில் பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ அவர் சிஎஸ்கே அணியுடன் தனது பயணத்தைத் தொடர்வார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சென்னை அணியின் முகமாகவும், ஆன்மாவாகவும் திகழ்பவர் தோனி. ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்து, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 2026 ஐபிஎல் தொடர், அந்த தோனி என்ற கிரிக்கெட் வீரரின் இறுதி அத்தியாயமாக அமையும் என்பதால், ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான தருணமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Thursday, August 28, 2025, 13:39 [IST]
Other articles published on Aug 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+