Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: தோனிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன்.. படுமோசமான பேட்டிங்

சென்னை: ஐபிஎல் தொடரில் தோனிக்கு சிம்ம சொப்பனமாக மாறி வருகிறார்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி. அவர்கள் இருவரது பந்துவீச்சிலும் தோனி இதுவரை திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறார் என்பதற்கான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தோனி நான்கு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் தோனி. அவர் எல்பிடபிள்யூ ஆகவில்லை, பந்து பேட்டில் உரசி காலில் பட்டது என ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டு இருக்கிறது. எனினும், மூன்றாம் நடுவர் பலமுறை ரீப்ளே செய்து பார்த்து பந்துக்கும் பேட்டுக்கும் இடையே இடைவெளி இருப்பதாக கூறி தோனி அவுட் என தீர்ப்பளித்தார்.

MS Dhoni s Nemesis in IPL - Sunil Narine and Varun Chakaravarthy dominates

அந்த வகையில் சுனில் நரைன் பந்துவீச்சில் தோனி தனது விக்கெட்டை இழந்தார். இதுவரை ஐபிஎல் தொடரில் சுனில் நரைனுக்கு எதிராக தோனி 15 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். அதில் 74 பந்துகளை சந்தித்து வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் சுனில் நரைனுக்கு எதிராக 52.7 என்பதாக உள்ளது. ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்துள்ளார்.

இதன் மூலம் சுனில் நரைன் பந்து வீசினால் தோனியால் ரன் குவிக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதேபோல மற்றொரு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு எதிராகவும் தொடர்ந்து தனது விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார் தோனி.

வருண் சக்கரவர்த்திக்கு எதிராக தோனி நான்கு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். அதில் 16 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால், மூன்று முறை தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார். வருண் சக்கரவர்த்திக்கு எதிராக தோனியின் பேட்டிங் சராசரி 5.3 என்பதாக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 68.75 என்பதாக உள்ளது.

இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடினால் தோனியால் இந்த இரண்டு பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாது என்பது இந்த புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நேற்றைய போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதை சரியாக பயன்படுத்தியது.

தோனி பேட்டிங் ஆட வந்தபோது வருண் சக்கரவர்த்தி தான் தோனி சந்தித்த முதல் இரண்டு பந்துகளை வீசினார். அடுத்த ஓவரில் சுனில் நரைன் பந்து வீசினார். அப்போது தோனி ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அபாரமாக வென்றது.

Story first published: Saturday, April 12, 2025, 8:27 [IST]
Other articles published on Apr 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+