For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்போ அம்பத்தி ராயுடு.. இப்போ சஞ்சு சாம்சன்.. உலககோப்பை அணியில் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் காமெடி

ஐதராபாத் : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் உலக கோப்பை அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது.

மேலும் செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் உலக கோப்பைக்கான அணியில் ஏதேனும் வீரர் காயம் அடைந்தால் மாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் ஐசிசி கெடு விதித்திருந்தது.

MSK Prasad picks R Ashwin and Rejects sanju samson in his world cup 15 member team

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத் தற்போது 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை ஒரு வீடியோ மூலம் தேர்வு செய்து இருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். எம்.எஸ்.கே பிரசாத் தேர்வு செய்துள்ள அணியில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி ஆகிய மூன்று வீரர்களுக்கும் டாப் 3 பேட்டிங்கில் இடம் கிடைத்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து நடு வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் , சூரியகுமார் யாதவ் ஆகியோரை எம்எஸ்கே பிரசாத் அணியில் தேர்வு செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோரை தேர்வு செய்துள்ள எம் எஸ் கே பிரசாத் அஸ்வினை சுழற் பந்துவீச்சாளராகவும், குல்தீப் அல்லது சாகல் ஆகிய இருவரில் ஏதேனும் ஒருவரை உலகக் கோப்பை அணியில் தாம் தேர்வு செய்வேன் என்று எம் எஸ் கே பிரசாத் கூறியுள்ளார்.

மேலும் வேகப்பந்துவீச்சாளராக பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோரை தேர்வு செய்துள்ள எம் எஸ் கே பிரசாத் கூடுதல் விக்கெட் கீப்பராக இஷான் கிஷனை தனது அணியில் இடம்பெற வைத்திருக்கிறார். எம் எஸ் கே பிரசாத் தேர்வு குழு தலைவராக இருந்தபோது 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் திறமை வாய்ந்த அம்பத்தி ராயுடுவை அணியில் சேர்க்கவில்லை..

தற்போது அவர் தேர்வு குழுவில் இல்லை என்றாலும் சஞ்சு சம்சனுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை. மேலும் தனது அணியில் அவர் ஒரு காமெடியை செய்து இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு அஸ்வினுக்கு இடம் கொடுக்காமல் இருந்த எம் எஸ் கே பிரசாத் தற்போது பதவியில் இல்லாத போது 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அஸ்வினை சேர்த்திருக்கிறார். இதனை சுட்டிக்காட்டி பலரும் எம்எஸ்கே பிரசாத்தை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Story first published: Sunday, August 27, 2023, 11:30 [IST]
Other articles published on Aug 27, 2023
English summary
MSK Prasad picks R Ashwin and Rejects sanju samson in his world cup 15 member team அப்போ அம்பத்தி ராயுடு.. இப்போ சஞ்சு சாம்சன்.. உலககோப்பை அணியில் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் காமெடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+