Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ரகானேவை சரியாக பயன்படுத்த தெரியவில்லை.. இல்லையெனில் அவர் வேற லெவல்”.. பிசிசிஐ மீது சீனியர் காட்டம்!

மும்பை: ரகானேவை எப்படி பயன்படுத்த வேண்டும் என பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரிகளுக்கு முன்னாள் வீரர் அறிவுரை கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஆச்சரியப்படும் வகையில் மீண்டும் ரகானே மற்றும் புஜாரவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக துணைக்கேப்டனாக இருந்த ரகானேவின் பதவி பறிக்கப்பட்டது. எனினும் அவரை அணிக்குள் சேர்த்துள்ளனர்.

சோகத்தில் ரகானே

சோகத்தில் ரகானே

இந்தாண்டு அஜிங்கியா ரகானேவுக்கு மோசமானதாக அமைந்துள்ளது என்று கூறலாம். அவரின் சராசரி ரன் ரேட் 20க்கும் கீழ் குறைந்துவிட்டது. கடந்த 2019ம் ஆண்டை பார்த்தால் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் அவர் 642 ரன்களை சேர்த்திருந்தார். அவரின் சராசரி 71.33 ஆக இருந்தது. 2020ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 38.85 ஆக குறைந்தது. நடப்பாண்டில் இன்னும் குறைந்து 19.57 என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்தாண்டில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி வெறும் 411 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் கடைசி 10 இன்னிங்ஸ்களில் 2 முறை தான் 20 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார்.

முன்னாள் வீரர் பதில்

முன்னாள் வீரர் பதில்

இப்படி மோசமாக சொதப்பி வரும் ரகானேவுக்கு ஏன் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கொடுத்தார்கள் என ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில் முன்னாள் வீரர் எம்.எஸ்.கே பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரகானே அயல்நாட்டு களங்களில் தான் சிறப்பாக விளையாடக்கூடியவர். சொந்த மண்ணில் அவரின் செயல்பாடு மோசமாக தான் இருக்கும். எனவே தேர்வுக்குழு அதிகாரிகள் முதலில் அவரை எங்கு பயன்படுத்த வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

அயல்நாட்டு களங்களில் ரகானே இதுவரை 3000 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். அவரின் சராசரி 41.71 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் வெறும் 35.73 மட்டுமே வைத்துள்ளார். அதுவும் குறிப்பாக SENA ( தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் அதிகம் ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரகானே 2வது இடத்தில் உள்ளார்.

Recommended Video

Captain பதவியை ராஜினாமா செய்ய Virat Kohli-க்கு கெடு விதித்த BCCI
எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள்

இந்த புள்ளிவிவரங்களை தேர்வுக்குழு அதிகாரிகள் கருத்தில் எடுத்துக்கொண்டு அவரை அயல்நாட்டு களங்களில் அதிகம் பயன்படுத்த வேண்டும். உள்நாட்டு போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தால், சிறப்பாக அமையும் என பிரசாத் கூறியுள்ளார். இதற்கு ஏற்றார் போல தான் தற்போது ரகானேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அவர் சரியாக பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 10, 2021, 19:52 [IST]
Other articles published on Dec 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+