Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்று வந்த வீரருக்கு முக்கியத்துவம்.. ஒதுக்கப்படும் பாண்ட்யா? - அணியில் புதிதாய் முளைத்த "உரசல்"

கொழும்பு: இலங்கை தொடரில், பாண்ட்யாவை விட அந்த இளம் வீரருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக முணுமுணுக்கப்படுகிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

விராட் கோலி தலைமையிலான மெயின் அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், இந்திய 20 வீரர்கள் கொண்ட 'ஏ' அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ.

 6 போட்டிகள்

6 போட்டிகள்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 கோச் டிராவிட்

கோச் டிராவிட்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்பு போல் முடியல

முன்பு போல் முடியல

இந்நிலையில், இத்தொடரில் பாண்ட்யாவுக்கு எப்போதும் இருப்பது போல் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆம்! ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் ஆல் ரவுண்டராகவே அறியப்படுபவர். "ஆல் ரவுண்டர்" என்பதால் தான் அவருக்கு வேல்யூ. ஆனால், அவர் முதுகு வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு இப்போது அவர் அணிக்கு திரும்பிவிட்டார். ஆனால், அவரால் முன்பு போல் பவுலிங் வீச முடியவில்லை. ஏன்.. பந்து வீசுவதே இல்லை. டி20 போட்டிகளில் நாலு ஓவர், 2 விக்கெட், அதிரடியாக 35 ரன்கள் என்பது பாண்ட்யாவின் ஒர்த்தாக இருந்தது. ஆனால், இப்போது அந்த ஆல் ரவுண்டர் எபிலிட்டி மாறிவிட்டதால், வெறும் ஒரு பேட்ஸ்மேனாக அவர் அணியில் நீடிப்பதை பிசிசிஐ அந்தளவு விரும்பவில்லை என்றே தெரிகிறது.

 அணியில் சேர்க்கவில்லை

அணியில் சேர்க்கவில்லை

அவருக்கு பதில் ஷர்துல் தாகூர் போன்ற ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்களை இன்னும் மெருகேற்றலாம் என்று பிசிசிஐ எண்ணுவதாகவும் தெரிகிறது. அதில் நியாயம் இருக்கவும் செய்கிறது. பாண்ட்யா போன்ற வீரர்கள் ஆசிய கண்டத்தில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால், SENA நாடுகளில் அவர் ஆல் ரவுண்டராக இருந்தால் மட்டுமே அவருக்கு மதிப்பு. இதனால், தான் தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடரில் கூட, ஹர்திக் பாண்ட்யா ஃபார்மில் இருந்து அவரை பிசிசிஐ அணியிலேயே சேர்க்கவில்லை. அதற்கு பதில் ஷர்துல் தாகூரை அழைத்துச் சென்றது.

 இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம்

இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம்

இந்த சூழலில் தான் அவர் இலங்கைக்கு எதிராக விளையாட, இந்திய 'ஏ' அணியில் இடம் பிடித்தார். முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட அந்த அணிக்கு பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், ஷிகர் தவானை கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ. சரி, குறைந்தபட்சம் துணை கேப்டனாகவாவது ஹர்திக் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பந்தமே இல்லாமல், புவனேஷ் குமாரை வைஸ் கேப்டனாக்கியது பிசிசிஐ. இப்போது, இலங்கை தொடரில் ப்ரித்வி ஷா, படிக்கல், சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. இத்தொடரில், பாண்ட்யா மாங்கு மாங்கென்று அடித்தால் கூட, அவரை வெறும் பேட்ஸ்மேனாக அணியில் நீட்டிக்க பிசிசிஐ விரும்பவில்லை என்பதே யதார்த்தம் என்கின்றனர் சில கிரிக்கெட் நோக்கர்கள்.

Story first published: Friday, July 9, 2021, 19:04 [IST]
Other articles published on Jul 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+