Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னப்பா இதை மறந்துட்டியா? பதறிய ஆப்கன் வீரர்.. விழுந்து விழுந்து சிரித்த வங்கதேச வீரர்கள்

தரம்சாலா : ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் செய்த காரியத்தை பார்த்து வங்கதேச அணி வீரர்கள் களத்திலேயே சிரிக்கத் துவங்கினர்.

பேட்டிங் செய்யும் போது அணிய வேண்டிய தற்காப்பு பொருள் ஒன்றை மறந்து வந்து விட்டார் முஜீப் உர் ரஹ்மான். பினனர் அவர் பதறிப் போய் அதை வாங்கி அணிந்தார்.

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டியில் தான் இந்த வேடிக்கையான சம்பவம் நடந்தது.

Mujeeb Ur Rahman forgot to wear abdominal guard during the ODI world cup match

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்கதேச அணையின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆப்கன் விக்கெட்களை வரிசையாக வீழ்த்தினர், 35வது ஓவரில் எல்லாம் 7வது விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான்.

அப்போது எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ஆட வந்தார் முஜீப் உர் ரஹ்மான். களத்துக்கு வந்த பின்தான் அவர் தான் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டதை உணர்ந்தார். அது அவரது "அப்டமன் கார்ட்" (Abdomen Guard). கிரிக்கெட் ஆடும் போது ஆண்கள் உள்ளாடைக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய தற்காப்பு பொருள் அது.

அதை மறந்து விட்டு களத்துக்கு வந்து விட்டார் முஜீப் உர் ரஹ்மான். பேட்டிங் செய்ய நிற்கும் முன் தான் இதை உணர்ந்த அவர் உடனே பதறிப் போய் தன் அணியினருக்கு சைகை செய்து "கார்டை எடுத்து வாருங்கள்" எனக் கூறினார். அதைக் கண்ட வங்கதேச அணி வீரர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது.

அப்டமன் கார்டு அணியாமல் பேட்டிங் செய்யும் போது வேகமாக வீசப்படும் பந்து அடி வயிற்றிலோ, மர்ம பகுதியிலோ பட்டால் அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம் அல்லது அந்த பகுதியில் மோசமான உள் காயங்களை அது ஏற்படுத்தலாம். அதற்காகவே, கிரிக்கெட்டில் அதை அணிவது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது.

கார்டை எடுத்து வரும் வரை முஜீப் முகம் போன போக்கை பார்த்து அவர்களுக்கு மேலும் சிரிப்பு வந்தது. எப்படியோ சமாளித்து அதை அணிந்து பின் ஆடினார் முஜீப். இத்தனைக்கும் அவர் 4 பந்துகள் சந்தித்து வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 37.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த வங்கதேசம் 4 விக்கெட்களை இழந்து 34.4 ஓவர்களில் இலக்கை எட்டி தங்களின் முதல் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றது.

மிக மோசமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி இத்துடன் உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ந்து 13வது தோல்வியை தழுவி இருக்கிறது.

Story first published: Sunday, October 8, 2023, 9:26 [IST]
Other articles published on Oct 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+