Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாரீஷ் ஷீல்டு கிரிக்கெட் போட்டி: 546 ரன்கள் குவித்து 15 வயது சிறுவன் சாதனை!

Mumbai: 15-year-old boy smashes a record 546 in Harris Shield
மும்பை: 16வயதுக்கு உட்பட்டோருக்கான பள்ளிகளிடையேயான கிரிக்கெட் போட்டியில் 15 வயது சிறுவன் 546 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் ஹாரீஷ் ஷீல்டுக்காக பள்ளிகளிடையே ஆண்டுதோறும் 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டில் ரிஸ்வி ஸ்ப்ரிங்ஃபீல்டு பள்ளியின் பிரித்வி ஷா அபாரமாக ஆடி 546 ரன்களைக் குவித்து சாதனை படைத்திருக்கிறார்.

செயின்ட் பிரான்சிஸ் பள்ளிக்கு எதிரான போட்டியில் நேற்று களமிறங்கிய பிரித்வி ஷா, 166 பந்துகளை எதிர்கொண்டு 257 ரன்களை எடுத்திருந்தார். இதில் 27 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.

இன்றும் தனது ஆட்டத்தைத் தொடங்கிய பிரித்விஷா, 500 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். அவர் மொத்தம் 546 ரன்களைக் குவித்தார். ஹாரீஷ் ஷீல்டுக்கான போட்டியில் முதல் முறையாக 546 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்திய அணியின் தொடக்க வீரராக இருந்த வாசிம் ஜாபரின் உறவினர் அர்மான் ஜாபர் 498 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 20, 2013, 15:22 [IST]
Other articles published on Nov 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+