
கிரிக்கெட் வாழ்க்கை
கிரிக்கெட்டில் அறிமுகமான உடனேயே, தனது முதல் 7 இன்னிங்ஸ்களில் 793 ரன்களை அடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதில் முதல் 4 போட்டிகளில் 2 இரட்டை சதங்கள் ஆகும். இப்படி வீரரால் நீண்ட வருடங்களுக்கு ஜொலிக்க முடியவில்லை. சச்சின் 100 சதங்களை அடித்த போது, வினோத் காம்பிளி 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். எனினும் அதில் 4527 ரன்களை குவித்தார்.

வேண்டுகோள்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், உள்ளூர் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த வினோத் காம்பிளிக்கு கடந்த 3 ஆண்டுகளாக எந்தவொரு பணியும் இல்லை. இதனால் கடன் மற்றும் வறுமையில் வாடினார். இதுகுறித்து உருக்கமான பதிவை வெளியிட்டார். அதில், பிசிசிஐ கொடுக்கும் ரூ.30,000 பென்சனை நம்பியுள்ள ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரராகும். பிசிசிஐ கொடுக்கும் அந்த தொகை தான் எனது ஒரே ஒரு வருமானம். எனக்கு ஏதாவது பணி இருந்தால் கொடுங்கள் என கேட்டுக்கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதிய பணி
இந்நிலையில் மும்பையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர் ஒருவர் வினோத் காம்பிளிக்கு பணி கொடுக்க முன்வந்துள்ளார். சயாத்ரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஃபினான்ஸ் பிரிவில் அவருக்கு பணி வழங்குவதாக கூறியுள்ளதால். இதற்காக மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளார். எனினும் இதற்கு காம்பிளியிடம் இருந்து இன்னும் எந்தவித பதிலும் வரவில்லை.

டெண்டுல்கர் அகாடமி
வினோத் காம்பிளி தற்போது டெண்டுல்கர் மிடில் செக்ஸ் குளோபல் அகெடமியில் பணி புரிந்து வருகிறார். இந்த பணியை அவரின் நண்பர் சச்சின் தான் பெற்றுக்கொடுத்தார். இதுமட்டுமல்லாமல் மும்பை மாநில கிரிக்கெட் அணியில் ஏதாவது பயிற்சியாளர் பணி வேண்டும் என காம்பிளி கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











