Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து மும்பை மாணவி சாதனை

மும்பை: மும்பையைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மாவுக்கு பிறகு, ஒருதினக் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கும் சாதனையை, 16 வயது மாணவி செய்துள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பைனல் வரை சென்று கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அசத்திய பிறகே, மகளிர் கிரிக்கெட் குறித்து இந்தியாவில் அதிகம் தெரியவந்துள்ளது.

Mumbai girl hit double century


இந்த நிலையில் மகளிர் கிரிக்கெட்டில் நடக்கும் உள்ளூர் ஒருதினப் போட்டிகளில், சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் மும்பையைச் சேர்ந்த 16 வயது கல்லூரி மாணவி ஜெமிமா ரோட்ரிகுஸ், இரட்டை சதம் அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட்டில், இந்த சாதனையை அவர் புரிந்தார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஒருதினப் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில், சவுராஷ்டிரா அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டனான,. 16 வயதாகும் ஜெமிமா 163 பந்துகளில், 24 பவுண்டரிகளுடன், 202 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், மும்பை அணி, இரண்டு விக்கெட் இழப்புக்கு, 347 ரன்கள் சேர்த்தது.

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீராங்கனையாக அவர் திகழ்கிறார். இந்திய அணிக்காக விளையாடியுள்ள ஸ்மிருதி மந்தனா இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீராங்கனையாவார்.

குஜராத் அணிக்கு எதிரான முந்தையப் போட்டியிலேயே ஜெமிமாவுக்கு இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், 142 பந்துகளில், 178 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஆட்டமிழந்தார்.

கல்லூரி மாணவியான ஜெமிமா, தன்னுடைய 12வது வயதிலேயே, மும்பையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தேர்வானார். மும்பையின் 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டனாகவும், மேற்கு மண்டல 19 வயதுக்குட்பட்டோர் அணி, 23 வயதுக்குட்பட்டோர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்திய மகளிர் சீனியர் அணிக்கான தேர்வுக்காக சமீபத்தில் பெங்களூர் சென்று திரும்பியுள்ளார்
Story first published: Monday, November 6, 2017, 16:35 [IST]
Other articles published on Nov 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+