Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'மும்பை இந்தியன்' சச்சினை வீழ்த்திய மேற்கு 'இந்தியர்'... பாதி 'சபதத்தை' நிறைவேற்றிய சமி...!

'Mumbai Indian' Sachin falls prey to an 'Indian', caught by a West Indian!
மும்பை: சச்சின் விக்கெட்டை வீழ்த்த எங்களது பந்து வீச்சாளர்களுக்குள் போட்டியே நடக்கிறது. அதில் நான் வென்றால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமி.

ஆனால் அவரது ஆசை ஒரு பந்து வீசசாளராக நிறைவேறாமல் போயிருந்தாலும், ஒரு பீல்டராக பாதி வெற்றி பெற்று விட்டார் சமி.

மும்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சமி, சச்சினின் 200வது டெஸ்ட் போட்டி மற்றும் கடைசி போட்டியில் நாங்களும் அவருடன் களத்தில் இருக்கப் போவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சச்சினின் விக்கெட் குறி்த்துத்தான் இப்போது நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். யார் அவரது விக்கெட்டைப் பறிப்பது என்று எங்களது பந்து வீச்சாளர்களுக்குள் போட்டியே நடக்கிறது. அதில் நான் வென்றால் மகிழ்ச்சி அடைவேன். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரோடு எங்களது பெயரும் சேர்த்துப் பேசப்படும் என்று கூறியிருந்தார்.

இன்று சமியின் கனவு பாதி நனவானது. ஒரு வேகப் பந்து வீச்சாளராக அவரால் இன்று சச்சினை வீழ்த்த முடியவில்லை. ஆனால் ஒரு பீல்டராக சச்சின் அவுட் ஆக சமி காரணமாக அமைந்து விட்டார்.

அதை விட முக்கியமாக சச்சினின் கடைசிப் போட்டியில் அவரது விக்கெட்டைப் பறித்த பெருமையை மேற்கு இந்திய அணிகளின் பந்து வீச்சாளர் நர்சிங் தியோனரைன் பெற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளி வீரர் என்பது இன்னொரு சுவாரஸ்யம்.

Story first published: Friday, November 15, 2013, 11:38 [IST]
Other articles published on Nov 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+