Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது சொர்க்கமே தான்.. மும்பை அணியின் புதிய மாற்றம்.. அம்பானி கொடுத்த சப்ரைஸ்.. குஷியில் ரோகித் சர்மா

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு பின்னர் 3 நாள் தனிமையில் இருந்தனர்.

இதனையடுத்து குவாரண்டையின் முடிந்த பிறகு வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு அம்பாணி சார்பாக சப்ரைஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஜெர்சி

புதிய ஜெர்சி

முதலாவது சப்ரைசாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி வழங்கப்பட்டது. இதில் வழக்கம் போல் நீல நிற ஆடையுடன் இருந்தாலும் SLICE என்ற புதிய நிறுவனத்தின் பெயர் அதில் இடம்பெற்று இருந்தது. இதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் புது ஜெர்சியுடன் போட்டோ சூட் எடுத்து கொண்டனர்.

திறந்தவெளி

திறந்தவெளி

இதனையத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு பயோ பபுள் சூழலில் மன தொய்வு ஏற்படுவதை தடுக்க, முழுக்க முழுக்க ஹோட்டலுக்கு வெளியவே பொழுதை கழிக்கும் அளவுக்கு ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அம்பானி. இதில், திறந்தவெளியின் பெரிய திரையில் டிவி பார்ப்பது, உணவு அருந்த தனி இடம், விளையாடுவதற்கு திறந்தவெளியில் ஆடுகளம் ஆகியவை அமைத்து தரப்பட்டுள்ளது.

பேட்டல்கிரவுண்ட்

பேட்டல்கிரவுண்ட்

இதே போன்று Battleground என்ற புதிய விளையாட்டு களமும் வீரர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்கள் விளையாட்டு துப்பாக்கியை வைத்து ராணுவ வீரர்கள் போல் தவழ்ந்து, ஏகிறி குதித்து விளையாடலாம். இந்த சாகச விளையாட்டு மூலம் வீரர்களுக்கு உடல் தகுதியும் மேம்படும், பயோ பபுள் தொல்லையும் இருக்காது.

கோல்ஃப் ஆடுகளம்

கோல்ஃப் ஆடுகளம்

மேலும் வெளிநாட்டு வீரர்களுக்கு கோல்ஃப் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் பயோ பபுள் காரணமாக வெளியே செல்ல முடியாது என்பதால் ஹோட்டலுக்கு வெளியவே திறந்தவெளியில் கோல்ஃப் மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப உறுப்பினர்கள் வந்து தங்குவதற்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் குஷியில் உள்ளனர்.

Story first published: Sunday, March 20, 2022, 16:52 [IST]
Other articles published on Mar 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+