மும்பை அணிக்கு அநீதி நடந்ததா.. ஐபிஎல் அட்டவணையில் உள்ள கடும் சவால்.. சமாளிப்பாரா ரோகித் சர்மா?
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த முறை சற்று சவாலான போட்டிகளாக தயார் செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த முறையும் 10 அணிகளையும் இரண்டு குரூப்களாக பிரித்து அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குரூப் ஏ-வில் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி, லக்னோ அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி- வில் சிஎஸ்கே, பஞ்சாப், ஐதராபாத், ஆர்சிபி, குஜராத் அணிகள் உள்ளன.

போட்டிகள் அட்டவணை
இந்த முறை சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடப்போகிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்க, மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சவாலாக அமைந்துள்ளது இந்த அட்டவணை. ஆதாவது கடந்த முறை ஒவ்வொரு அணியும் தனது குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும், மற்றொரு குரூப்பில் உள்ள 3 அணிகளுக்கு எதிராக மட்டும் 2 முறை மோதும். ஆனால் இந்த முறை சொந்த குரூப் அணிகளுடன் ஒருமுறையும், மற்றொரு குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும் என கூறப்பட்டுள்ளது.

மும்பைக்கு பிரச்சினை
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி படு பலமான அணிகளுடன் தான் 2 முறை நேருக்கு நேர் மோதவுள்ளது. குரூப் பி பிரிவில் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. கடந்த முறை கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் இருக்கிறது. டூப்ளசிஸ் தலைமையில் கலக்கிய ஆர்சிபி 3வதாக உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் படு பலமான வீரர்களை தட்டித்தூக்கிய ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இருக்கின்றன.

சற்று கடினம்
மும்பை இருக்கும் ஏ குரூப்பில் ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி, லக்னோ போன்ற அணிகள் தான் ஒரே ஒருமுறை மோதுகின்றன. எனவே மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற வேண்டும் என்றால் பலமான அணிகளோடு முட்டி மோதிவிட்டு தான் செல்ல வேண்டும். ஆனால் சிஎஸ்கேவுக்கு சற்று சவால்கள் குறைவு தான் எனக்கூறலாம்.

மும்பையின் போட்டிகள்
மும்பை அணியின் போட்டி விவரங்கள்
ஆர்சிபி - ஏப்ரல் 2
சிஎஸ்கே - ஏப்ரல் 8
டெல்லி - ஏப்ரல் 11
கொல்கத்தா - ஏப்ரல் 16
ஐதராபாத் - ஏப்ரல் 18
பஞ்சாப் - ஏப்ரல் 22
குஜராத் - ஏப்ரல் 25
ராஜஸ்தான் - ஏப்ரல் 30
பஞ்சாப் - மே 3
சிஎஸ்கே - மே 6
ஆர்சிபி - மே 9
குஜராத் - மே 12
லக்னோ - மே 16
ஐதராபாத் - மே 21


Click it and Unblock the Notifications