Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஊர்களில் 14 போட்டிகள்... மும்பை அணியின் ஐபிஎல் போட்டி அட்டவணை இதோ

மும்பை: ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் மும்பை அணி ஆடவுள்ள போட்டிகள் குறித்து பார்க்கலாம்.

14வது ஐபிஎல் தொடருக்கான அட்டவனை மற்றும் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத பெங்களூரு அணியும் முதல் போட்டியில் மோதவுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 4 மைதானங்களில் ஆடும். மேலும் 3 முறை மட்டுமே அணிகள் வெளியூர்களுக்கு பயணிக்கும். எனவே மும்பை அணியின் பயணத்திட்டத்தை பார்க்கலாம்.

 முதல் ஊர்:

முதல் ஊர்:

முதலில் சென்னையில் தொடரை தொடங்கும் மும்பை அணி தொடர்ந்து 5 போட்டிகளை அங்கு ஆடவுள்ளது. அதன்படி ஏப்.9ம் தேதி ஆர்.சி.பியுடன் மோதுகிறது. பின்னர் ஏப்.13ம் தேதி கொல்கத்தாவுடனும், ஏப்.17ம் தேதி ஐதராபாத்துடனும் மோதவுள்ளது. அதனையடுத்து ஏப்.20ம் தேதி டெல்லி அணியுடனும், ஏப்.23ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும் மோதுகிறது. பின்னர் சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகிறது.

2வது ஊர்

2வது ஊர்

2வதாக டெல்லி வரும் மும்பை அணி அங்கு 4 போட்டிகளில் ஆடவுள்ளது. அதன்படி, ஏப்.29ம் தேதி ராஜஸ்தான் அணியுடனும், மே 1ம் தேதி சென்னை அணியுடனும் மோதுகிறது. அதன் பின்னர், மே4ம் தேதி ஐதராபாத் அணியுடனும், மே 8ம் தேதி மீண்டும் ராஜஸ்தானுடன் மோதுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து பெங்களூரு செல்கிறது.

3வது ஊர்

3வது ஊர்

டெல்லியிலிருந்து பெங்களூர் வருகை தரும் மும்பை அணி அங்கு மொத்த 3 போட்டிகளில் ஆடவுள்ளது. அதன்படி மே 13ம் தேதி கொல்கத்தா அணியுடனும், மே 13ம் தேதி பஞ்சாப் அணியுடனும், மே 20ம் தேதி சென்னை அணியுடனும் அங்கு மோதுகிறது. இந்த 3 போட்டிகளையும் முடிந்த பிறகும் இந்த அணி கொல்கத்தா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

4வது ஊர்

4வது ஊர்

கொல்கத்தா வரும் மும்பை அணி அங்கு இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்கவுள்ளது. அதன்படி மே 20ம் தேதி பெங்களூரு அணியுடன் விளையாடவுள்ளது. அதன் பின்னர் மே 23ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் தனது கடைசி லீக் தொடரில் மோதுகின்றது. மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் இந்த அணி மும்பை அல்லது அகமதாபாத்திற்கு செல்லும்.

Story first published: Monday, March 8, 2021, 0:30 [IST]
Other articles published on Mar 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+