Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடச்சீ!! சண்டைனா இப்படியா பண்ணுவாங்க? இளம் வீரருக்கு 3 ஆண்டு தடை விதித்த கிரிக்கெட் போர்டு

Recommended Video

இளம் வீரருக்கு 3 ஆண்டு தடை விதித்த கிரிக்கெட் போர்டு- வீடியோ

மும்பை : மும்பை அண்டர் 16 அணி வீரர் ஒருவரை 3 வருடம் தடை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது மும்பை கிரிக்கெட் போர்டு.

சம்பந்தப்பட்ட அந்த இளம் வீரர் ஆந்திராவில் நடந்த காலிறுதிப் போட்டி போட்டிக்கு முன் மிக மோசமான செயல் ஒன்றை செய்ததாகவும், அதை ஒட்டி அவருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் மும்பை கிரிக்கெட் போர்டு கூறியுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம், கடப்பாவில் நடந்த அண்டர் 16 காலிறுதிப் போட்டியில் உத்தர பிரதேச அணியை சந்தித்தது மும்பை அணி. இந்த போட்டிக்கு முன்னதாக ஹோட்டல் அறையில் சக வீரருடன் நடந்த சண்டையின் போது இந்த வீரர் தன் கால் சட்டையை வேண்டுமென்றே நழுவ விட்டுள்ளார்.

3 ஆண்டு தடை

3 ஆண்டு தடை

இந்த ஒழுங்கீனமான செயலை செய்த அந்த வீரர் மீது மும்பை கிரிக்கெட் போர்டின் சார்பில் விசாரணை நடந்தது. அதன் முடிவில் அந்த வீரரை ஜனவரி 15 முதல் மூன்று ஆண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

அறிக்கையில் சொன்னது என்ன?

அறிக்கையில் சொன்னது என்ன?

அதன் விசாரணை அறிக்கையில், "இந்த சம்பவம் அணி சூழ்நிலையையும் விளையாட்டு வீரர்களின் அடிப்படை விதிகளையும், சக அணி வீரர்களுடனான ஆரோக்கிய போக்கையும் சிதைக்கும் வகையில் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.

அப்பீல் செய்ய உள்ள பெற்றோர்

அப்பீல் செய்ய உள்ள பெற்றோர்

அந்த இளம் வீரரின் பெற்றோர் கூறுகையில், ஒரு சிறுவனுக்கு மூன்று வருட தடை என்பது மிகவும் பெரிய தண்டனை. இந்த தண்டனைக்கு எதிராக நாங்கள் அப்பீல் செய்யப் போகிறோம் என கூறியுள்ளனர்.

இன்னும் நிறைய இருக்கு

இன்னும் நிறைய இருக்கு

அதே சமயம் மும்பை கிரிக்கெட் போர்டை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இந்த வீரர் மீது இது மட்டுமே ஒரே புகார் அல்ல. இதே போன்று, அதிக தண்டனைக்கு உரிய பல குற்றங்களை அவர் செய்துள்ளார்.

வாழ்நாள் தடை இல்லை

வாழ்நாள் தடை இல்லை

இந்த முறை கூட அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க முதலில் முடிவு செய்யப்பட்டு பின்னர், ஒரு வாய்ப்பு வழங்கும் நோக்கில் அது 3 வருடங்களாக குறைக்கபட்டதாக தெரிவித்தார்.

Story first published: Friday, January 18, 2019, 15:38 [IST]
Other articles published on Jan 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+