Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரித்விஷா, ஆதித்யா டேர் காட்டடி.. விஜய் ஹசாரேவில் புதிய சாதனை..4வது முறையாக கோப்பை வென்றது மும்பை!

டெல்லி: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் மும்பை மற்றும் உத்தரபிரதேச அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இதில் பிரித்திவி ஷா மற்றும் ஆதித்யா டேர் ஆகியோரின் உதவியால் மும்பை அபார வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

மும்பைக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற உத்தரபிரேதச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அந்த அணியின் தொடக்க வீரராக மாதவ் கௌசிக் மற்றும் சமார்த் சிங் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். மாதவ் தொடக்கம் முதலே அதிரடி காட்ட, மறுமுனையில் நின்றிருந்த சமார்த் 55 ரன்கள் எடுத்தனர். ஆனால் அவர் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை.

டார்கெட்

டார்கெட்

அதன்பின்னர் கரன் ஷர்மா (0) , ப்ரியம் கார்க்(21), அக்‌ஷ்தீப் நாத்(55) ஆகியோர் ஆட்டமிழக்க, மாதவ் மட்டும் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். மொத்தம் 156 பந்துகளை எதிர்கொண்ட அவர், 158 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் உத்தரபிரதேச அணி 312 ரன்களை எடுத்தது.

துரதிஷ்டவசம்

துரதிஷ்டவசம்

இதனையடுத்து 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா வழக்கம் போல் பந்துகளை சிதறடித்தார். 39 பந்துகளை எதிர்கொண்ட அவர் 73 ரன்களை அடித்து அசத்தினார். அதே போல், விஜய் ஹசாரே ட்ராபியில் ஒரே தொடரில் 800 ரன்களை கடந்த வீரர் என்ற புகழை பெற்றார். இந்த தொடரில் 8 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 827 ரன்களை எடுத்துள்ளார்.

கோப்பை

கோப்பை

இதன் பின்னர் களமிறங்கிய ஆதித்யா டேர் மற்றும் ஷாம்ஸ் முலானி ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய டேர் சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல் சிவம் தூபே அவரின் பங்கிற்கு 42 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார். இதனால் அந்த அணி 41.3 ஓவர்களில் 315 ரன்களை எடுத்து கோப்பையை வென்றது.

Story first published: Sunday, March 14, 2021, 17:52 [IST]
Other articles published on Mar 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+