பதுங்கிப் பாய்ந்த மும்பை
லக்னோ: புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், துவக்கத்தில் இருந்து உத்தர பிரதேச அணி முன்னணியில் இருந்தாலும், காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாட முடியாத ஷபீர் பாப்பு அபாரமாக விளையாடி, மும்பைக்கு மற்றொரு வெற்றியை உறுதி செய்தார்.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. 12 அணிகள், இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள், கடந்த வாரம் முழுவதும் குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது.

அடுத்தக்கட்ட போட்டிகள், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், யு மும்பா அணியும், உ.பி.,யோத்தா அணியும் மோதின.
மும்பை அணிக்காக முன்பு விளையாடிய ரிஷாங்க் தேவாடிகா, தற்போது உ.பி., அணிக்காக விளையாடியாடுகிறார். அவர் இந்தப் போட்டித் தொடரில் மிகவும் அதிகபட்சமாக, 14 புள்ளிகள் எடுத்து, உத்தர பிரதேச அணிக்கு வலுசேர்த்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே, 4-0 என உ.பி., முன்னிலை பெற்றது. அதன்படி, தேவாடிகாவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மும்பை அணி திணறியது.
இந்த நேரத்தில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மும்பையின் ஷப்பீர் பாப்பு. 13 புள்ளிகள் எடுத்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
முதல் பாதியின் இறுதியில், 23-20 என, உ.பி., அணி முன்னிலையில் இருந்தது.
கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் அணிகளில் ஒன்றான, மும்பை, அதை தக்க வைக்கும் வகையில், கடுமையாகப் போராடியது. ஆட்டம் முடிவடைய நான்கு நிமிடங்கல் இருக்கும்போது, 35-31 என, மும்பை முன்னிலை பெற்றது. இறுதியில் 37 - 34 என, மும்பை வென்றது.
இதன் மூலம், ஏ மண்டலத்தில் உள்ள மும்பை அணி, 5 போட்டிகளில், 3ல் வெற்றி, 2ல் தோல்வியுடன், 15 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பி மண்டலத்தில் உள்ள உ.பி. அணி, 6 போட்டிகளில், 3ல் வெற்றி, 2ல் தோல்வியுடன், 19 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில், இரண்டாவது இடத்தில் உள்ளது.
Story first published: Saturday, August 19, 2017, 19:23 [IST]
Other articles published on Aug 19, 2017


Click it and Unblock the Notifications