Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் வெற்றியை பெற்றது மும்பை இந்தியன்ஸ்...ரோகித் அதிரடி !

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9 - வது ஐபிஎல் சீசன் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Mumbai won their first IPL

முதலில் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ராபின் உத்தப்பா 8 ரன்னில் அவுட்ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அரைசதம் கடந்த காம்பீர் 52 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே 29 பந்தில் 52 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஆன்ட்ரி ரசல் 36 ரன்கள் எடுத்தார். முன்ரோ 4 ரன்னில் அவுட்ஆனார். இதனால் கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட் செய்தது. மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும், பார்த்தீவ் பட்டேலும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி 4.5 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களை எட்டியது. 5.5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த போது பார்த்தீவ் பட்டேல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பாண்டே 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய மெக்சிலெனாகன் 3 சிக்ஸர்களை பறக்க விட்டார். சிறிது நேரம் அதிரடி காட்டிய அவர் 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன், பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் குவித்தது. கொல்கத்தாவின் பந்துவீ்ச்சை அடித்து நொருக்கிய பட்லர் 22 பந்துகளில் 41 ரன்கள் குவித்து 18.3 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணியின் வெற்றிக்கு 9 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் அந்த ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசி ரோகித் சர்மா அசத்தினார். இதனால் மும்பை அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்றது. அதிரடி காட்டிய ரோகித் சர்மா 54 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 84 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Thursday, April 14, 2016, 10:57 [IST]
Other articles published on Apr 14, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+