Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் முரளி கார்த்திக் சேர்ப்பு


மும்பை:

ஆஸ்திரேலியா அணியுடனான மீதம் உள்ள நான்கு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் முரளி கார்த்திக் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

Murali Karthikஇந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் சரியான பந்து வீச்சாளர்கள் இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் முன்னணி வீரர்களும் சரியாக பேட் செய்யவில்லை.

வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுத்தாலும், ரன்களை வாரி கொடுத்து விடுகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் தான் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹர்பஜன் சிங் விக்கெட்டுகள் எதுவும் எடுக்காவிட்டாலும், 10 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

யுவராஜ் சிங்கின் பந்து வீச்சும் பரவாயில்லை. முதல் 2 ஒருநாள் போட்டியில் சேர்க்கப்பட்ட ரமேஷ் பவாரின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது. அவரின் பந்துவீச்சில் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களை குவித்தனர். அதனாலேயே 3வது போட்டியில் அவர் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் அணிக்கு மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இருந்தால் தான் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்று கருதி 4 மற்றும் 5 வது ஒருநாள் போட்டிகளில் ரமேஷ் பவார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியாமல் (அல்லது வாய்ப்பு வழங்கப்படாமல்) திணறி வருகிறார். நல்ல பந்து வீச்சாளராக முரளி கார்த்திக் இருந்தும் கூட பாலிட்ட்டிக்ஸ் காரணமாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் முரளி கார்த்திக். 4வது ஒருநாள் போட்டியில் முரளி கார்த்திக் விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி விவரம்:

டோணி (கேப்டன்), யுவராஜ்சிங், கங்குலி, சச்சின், டிராவிட், உத்தப்பா, காம்பிர், ரோகித் ஷர்மா, திணேஷ் கார்த்திக், இர்பான் பதான், ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக், ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், ஜாகீர்கான்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+