இரண்டாவது டெஸ்டில் ஜோடி போட்டு சாதனை செய்த முரளி விஜய், குல்தீப்... எதில் என கேட்காதீர்கள்...
Recommended Video

ஜோடி போட்டு சாதனை செய்த முரளி விஜய், குல்தீப்- வீடியோ
லண்டன் : இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமான இன்னிங்க்ஸ் தோல்வியை அடைந்தது. அந்த போட்டியில், முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் மோசமான சாதனையை செய்துள்ளனர்.
இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டு வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 107 மற்றும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதே போல, இந்திய பந்து வீச்சாளர்களால் ஏழு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. 396 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. இறுதியில் இந்தியா 159 ரன்கள் மற்றும் இன்னிங்க்ஸ் தோல்வியை சந்தித்தது.
இந்த மோசமான தோல்வியில், சில மோசமான சாதனைகளையும் இந்திய வீரர்கள் செய்துள்ளனர். அதில் குறிப்பாக, முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ரன் ஏதும் அடிக்காமல் “டக் அவுட்” ஆனார்கள்.
இதன் மூலம், முரளி விஜய் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் ஆறாவது வீரராக இந்த சோக சாதனையை செய்துள்ளார். இதற்கு முன், இந்திய தொடக்க வீரர்கள் பங்கஜ் ராய், பாரூக் எஞ்ஜினியர், வாசிம் ஜாபர், சேவாக் மற்றும் தவான் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.
இதில் இங்கிலாந்தில் மட்டும், பங்கஜ் ராய், சேவாக் ஆகியோரோடு தற்போது முரளி விஜயும் சேர்த்து, இந்திய தொடக்க வீரர்கள் மூன்று பேர் இந்த மோசமான சாதனையை செய்துள்ளனர். அதே போல, இந்திய அணி ரன் ஏதும் எடுக்காமல் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் முதல் விக்கெட்டை இழப்பது, சுமார் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடந்துள்ளது. இதற்கும், முரளி விஜய் தான் காரணம்.
குல்தீப் யாதவ் மற்றும் விஜய் இருவரும் ஜோடி போட்டுக்கொண்டு இரண்டு வாய்ப்பிலும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். இந்திய அணியில் இரண்டு வீரர்கள் ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் பூஜ்யத்தில் ஆட்டமிழப்பது, நான்காவது முறையாகும்.
இந்தியா தோற்ற செய்தியோடு, இது போன்ற வேதனையான சாதனைகளும் வெளியாகி வருகின்றன.
Story first published: Monday, August 13, 2018, 15:45 [IST]
Other articles published on Aug 13, 2018


Click it and Unblock the Notifications